சிதம்பரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’திட்ட சிறப்பு முகாம்
சிதம்பரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு முகாம் சிறப்பாக நடைபெற்றது. வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் மனு கொடுத்தவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான ஆணையை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யாசெந்தில்குமார், சார் ஆட்சியர் கிஷன்குமார், நகராட்சி ஆணையர் மல்லிகா, வட்டாட்சியர் கீதா உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட அரசு துறைகளின் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.