tamilnadu

img

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகள்; மருத்துவமனையிலிருந்தே முதல்வர் ஆய்வு!

செந்துறை, ஜெயங்கொண்டத்தில்  இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

அரியலூர், ஜூலை 23 - அரியலூரை அடுத்த வாலாஜா நகரத்திலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்திலும், கீழப்பழுவூர் மற்றும் மேலப்பழுவூர் ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து, கீழப்பழுவூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகிலும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் செவ்வாய்க் கிழமை நடைபெற்றன. இம்முகாம்களை ஆட்சியர் பொ.ரத்தினசாமி தொடக்கி வைத்து,  பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும், முகாமில் மனு அளித்த நபர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கான ஆணையினை வழங்கினார். வியாழக்கிழமை (ஜூலை 24) செந்துறை ஒன்றியத் துக்குட்பட்ட அயன்தத்தனூர், சன்னாசிநல்லூர் மற்றும் தளவாய் ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து, தளவாய் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகிலும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட இளையபெருமாள்நல்லூர் மற்றும் முத்துசேர்வாமடம் ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து முத்துசேர்வாமடம் கற்பகம் திருமண மஹா லிலும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் நடை பெறுகின்றன.

மருத்துவமனை மேற்கு பகுதியில்  தார்ச்சாலை அமைக்க கோரிக்கை

கரூர், ஜூலை 23 - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர்  வட்டக் கிளை 3 இன் வட்ட செயற்குழு கூட்டம் சங்க அலுவலக கூட்டரங்கில் நடை பெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் வட்டத் தலைவர்  ஆர்.பிரேம்குமார் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் ஏ.பி.சுப்பிரமணியன் வர வேற்று பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் சி.கண்ணன் சிறப்புரையாற்றினார். சங்கத்தின்  வட்டச் செயலாளராக எஸ்.சக்தி, துணைச் செயலாளராக மணிகண்டன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  மாவட்ட மகளிர் துணை குழு அமைப்பா ளர் ஆர்.முத்துமாரி, தமிழ்நாடு செவிலி யர்கள் மேம்பாட்டு சங்க மாவட்டத் தலைவர்  பிரவீனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். பொருளாளர் எம்.பெரியசாமி நன்றி கூறி னார். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொளந்தாகவுண்டனூர் முதல் மருத்துவமனை வரை சொல்லும் பிரதான சாலை குண்டும், குழியுமாக உள்ளது. மேலும்  இச்சாலையில் சாக்கடை கழிவுநீர் தேங்கி  நிற்பதால் மருத்துவமனைக்கு வரும் நோயா ளிகள், பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். உட னடியாக புதிய தார்ச்சாலை அமைத்து, கழிவு  நீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யின் மேற்கு நுழைவு வாயில் பகுதியில்  உள்ள மண் சாலையை தார்ச்சாலையாக அமைத்து கொடுக்க கரூர் மாநகராட்சி நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. எனவே அரசு ஊழியர்களுக்கு மாநக ராட்சிக்கு வழங்கும் வாடகைப் படியை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.