tamilnadu

‘தேர்தல் நேரத்தில் மட்டும் மாநில அந்தஸ்து பேசும் முதல்வர் ரங்கசாமி’

‘தேர்தல் நேரத்தில் மட்டும் மாநில அந்தஸ்து பேசும் முதல்வர் ரங்கசாமி’

புதுச்சேரி, மே 16- தேர்தல் நேரத்தில் மட்டுமே மாநில அந்தஸ்து   பிரச்சனையை முதல்வர் ரங்கசாமி கையில் எடுப்பார் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வியாழனன்று (மே 15) செய்தியாளர்களிடம் கூறியதாவது: காஷ்மீர் தாக்குதல், ராணுவ  தாக்குதல் தொடர்பாக விவாதிக்கக் கோரியதற்கு பிரதமர் மோடி மவுனம் காக்கிறார். இத்தாக்குதல் தொடர்பாக காங்கிரஸ் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் தரவேண்டும்.  முதல்வர் ரங்கசாமி தற்போது மாநில அந்தஸ்து கோருவது முதல்வரின் கபட நாடகம், புதுச்சேரிக்கு வந்த ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதனை மாற்ற கோரியுள்ளார். ஆனால், அவரை மாற்ற முடியாது என்று தெரி வித்து விட்டனர். இருவருக்கும் இடையே பனிப்போர் நீடிக்கிறது. தற்போது முதல்வர் ரங்கசாமி ஆளுநர், தலைமைச்செயலர், ஆளுநரின் செயலர் ஆகியோரை டார்கெட் செய்கிறார். வரும் ஆகஸ்ட் மாதத்தில் புதுச்சேரி ஊழல்கள் தொடர்பாக குடியரசுத் தலைவரை சந்தித்து புகார் அளிக்க உள்ளோம். இவ்வாறு கூறினார்.