லக்னோ:
அவசர கதியில் கொண்டுவரப்படும், குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதாவை,பகுஜன் சமாஜ் எதிர்ப்பதாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி கூறியுள்ளார். இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்என்றும் மாயாவதி வலியுறுத்தியுள்ளார். மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் இந்த குடியுரிமைத் திருத்த சட்ட மசோதா, அம்பேத்கரின் கொள்கைகள் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் இந்த குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதா வலுக்கட்டாயமாக நாட்டில் கொண்டு வரப்படுகிறது என்றும் மாயாவதி குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், மக்களின் நலனுக்காக மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால் அதனை தனது பகுஜன் சமாஜ் கட்சி வரவேற்கும் என்று கூறியுள்ள மாயாவதி அதற்கு உதாரணமாக காஷ்மீரில் 370 பிரிவு நீக்கப்பட்டதற்கு தனது கட்சி ஆதரவை தெரிவித்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.