tamilnadu

img

பாஜக செய்தித் தொடர்பாளர் சொல்கிறார் காந்தியை இந்தியர்களுக்கு தெரியாது; அவர், பாகிஸ்தானின் தேசத் தந்தை

போபால், மே 18-போபால் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர், மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பிரதான குற்றவாளியுமான பிரக்யா சிங் தாக்குர், சில நாட்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், மகாத்மா காந்தியைக் படுகொலை செய்த நாதுராம் கோட்சேவை, ‘தேச பக்தர்’ என்று குறிப்பிட்டிருந்தார். உண்மையில், ஆர்எஸ்எஸ் - பாஜக நிலைபாட்டைத்தான் பிரக்யாசிங் கூறியிருந்தார். ஆனால், பிரக்யாவின் இந்த கருத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகிளம்பியதால், எச்சரிக்கை அடைந்தபாஜக, “பிரக்யா கூறியது அவரின்தனிப்பட்ட கருத்து” என்று தப்பித் தது. மேலும், கோட்சே தேசபக்தரா, இல்லையா?; அதுதொடர்பாக பாஜகவின் கருத்து என்ன? என்று எதையும் விளக்காமல், வெறுமனே, பிரக்யாவைக் கண்டிப்பதாக மட்டும் பாஜக கூறிக்கொண்டது. பிரக்யாசிங்கும் தனது கருத்துக்கு மேலோட்டமான மன்னிப்பு ஒன்றைக் கேட்டுக்கொண்டார். இத்துடன் சர்ச்சை ஓய்ந்து விட்டதாக அனைவரும் கருதினர்.ஆனால், பாஜக-வின் மத்தியப்பிரதேச மாநில, செய்தித் தொடர்பாளர் அனில் சவுமித்ரா, “மகாத்மா காந்தி,பாகிஸ்தானுக்குத்தான் தேசத் தந்தை” என்று கூறி, காந்தி குறித்த,பாஜகவின் உள்ளார்ந்த நிலைபாட்டை மீண்டும் முச்சந்தியில் போட்டு உடைத்துள்ளார்.“மகாத்மா காந்தி, தேசத் தந்தைதான். ஆனால் இந்தியாவுக்கு அல்ல; அவர், பாகிஸ்தானின் தேசத் தந்தைஆவார். அவரைப் போன்று பல கோடிபேர் இந்தியாவில் இருக்கின்றனர்.” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.இது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வியெழுப்பிய போது,“யாரும் இந்த நாட்டின் தேசத் தந்தையைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே மகாத்மாகாந்தி, பாகிஸ்தானின் தேசப் பிதாவாகவும் இருக்க வாய்ப்புள்ளது” என்று மீண்டும் தனது கருத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.அனில் சவுமித்ராவின் இந்த பதிவுக்கு, பாஜக, வழக்கம்போல கண்டனம் தெரிவித்துள்ளது. கண்துடைப்பு நடவடிக்கையாக, அவரைக் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளது. சவுமித்ராவும், காந்தி குறித்த தனது ட்விட்டர் பதிவினை நீக்கியுள்ளார்.அதேநேரம், “ஒருவர் 24 மணி நேரமும் ஒரு கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருக்க முடியாது; அவர் சொல்லும் கருத்து எப்போதும் அவர்சம்பந்தப்பட்ட கட்சியின் கருத்தாகஇருக்காது” என்று துடுக்கான விளக் கம் ஒன்றையும் கொடுத்துள்ளார்.