லக்னோ:
கடந்த மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தோற்கடித்து வெற்றி பெற்றவர்,பாஜக-வின் ஸ்மிருதி ராணி.பிரதமர் மோடியின் நம்பிக்கைக்குஉரியவர்களில் ஒருவராக இருக்கும் ஸ்மிருதி இரானி, தொடர்ந்து இரண்டாவது முறையாக மத்திய அமைச்சர் பதவியை வகித்து வருகிறார்.கொரோனா நெருக்கடி காலத்தில்எம்.பி., எம்எல்ஏ-க்கள் தங்கள் தொகுதியிலேயே தங்கியிருந்து, மக்களுக்குமுடிந்தளவு உதவிகளைச் செய்து வருகின்றனர். ஆனால், ஸ்மிருதி இரானிஒரு மத்திய அமைச்சராக இருந்தும், அவர் தொகுதிப் பக்கம் வரவில்லை என்று சொந்தக் கட்சியினர் மத்தியிலேயே முணுமுணுப்பு இருந்து வந்தது.இந்நிலையில், “அமேதி எம்.பி.ஸ்மிருதி இரானியைக் காணவில்லை’’ என்று தொகுதி முழுவதும்கறுப்பு - வெள்ளையில் போஸ்டர்கள்வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
“கடந்த தேர்தலில் வெற்றி பெற்றபின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு நாட்கள் வந்திருந்து இரண்டு மணி நேரம் மட்டுமே தங்கி இருந்து, அமேதியில் உங்கள் இருப்பை பதிவுசெய்தீர்கள். அதன் பின் எங்கே சென் றீர்கள்?’’ என்று அந்த போஸ்டரில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.“அமேதி தொகுதி உங்களுக்குச் சுற்றுலாத் தலமாகப் போய் விட்டதா?’’ எனவும் கேள்வி எழுப்பப்பட்டுஉள்ளது.இந்த போஸ்டரை ஒட்டியது, எதிர்க்கட்சியினரா அல்லது சொந்தக்கட்சியினரே தானா? என்று தெரியவில்லை. எனினும், தொகுதி மக்களின் எண்ணத்தை பிரதிபலிப்பதாகவே அவை இருப்பதாக அமேதிவாசிகள் கூறுகின்றனர்.