tamilnadu

img

ரிலையன்ஸ் மதிப்பு 9 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது

மும்பை:
இந்திய பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கிறது. இந்தியாவின் ஏற்றுமதி - இறக்குமதி, ஜிடிபி மதிப்பு, ஜிஎஸ்டி வருவாய், ரூபாய் மதிப்பு என அனைத்தும் சரிந்து விட்டது. இந்திய அரசின் கடன் அதி
கரித்து விட்டது. சிறு-குறு, நடுத்தரத் தொழில்கள் நசிந்து விட்டன. வேலையின்மை பெருகி விட்டது. வறுமை அதிகரித்துக் கொண்டே போகிறது. இவ்வாறு ஒட்டுமொத்த இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய பெருமுதலாளிகளின் சொத்து மதிப்புக்கு மட்டும் எந்த பிரச்சனையும் இல்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போய்க்கொண்டிருக்கிறது. 

அந்த வகையில், இந்தியாவின் முதற்பெரும் பணக்காரரான முகேஷ்அம்பானியின் ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவன சந்தைமதிப்பு ரூ. 9 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டு உச்சம் பெற்றுள்ளது. இந்திய நிறுவனங்களில், 9 லட்சம்கோடி ரூபாய் மதிப்பைத் தாண்டியமுதல் நிறுவனம் என்ற பெருமையை,ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பெற்றுள்ளது.நடப்பு காலாண்டில், இந்நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரித்து வருவதால், இந்த பங்குகளின் விலை மேலும் உயரும் என, பங்குச் சந்தைஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், தொலைத் தொடர்பு, எண்ணெய் சுத்திகரிப்பு, சில்லரைவியாபாரம் உள்ளிட்ட பல வர்த்தகங்களில் ஈடுபட்டு வருகிறது. இதில்,ரிலையன்ஸ் ஜியோவின் லாபம் மட்டும், கடந்த 3 மாதங்களில் 990 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ரீடெய்ல் தொழிலில் லாபம் 2,322 கோடி ரூபாயைத் தொட்டுள்ளது. 2019 - 20 நிதியாண்டின் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் மட்டும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ. 11 ஆயிரத்து 262 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது.