போபால்:
மத்தியப் பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த பிளஸ்-2 வகுப்பு மாணவன் மாரடைப்பால் மரணம் அடைந்தான். நஸீராபாத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பர்கான் குரேஷி என்ற 16 வயது மாணவன் பிளஸ்-2 படித்து வந்தான். மே 26 ஆம் தேதி மாலை தனது ஸ்மார்ட் போனில் பப்ஜி விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது அவனுடன் அதே அறையில் தங்கை பிஸாவும் இருந்துள்ளார். அப்போது திடீரென பர்கான் சுடு சுடு என்று கத்தியுள்ளான். பிறகு, உன்னால் எனது ஆட்டமே தோற்று விட்டது. இனி உன்னுடன் விளையாட மாட்டேன் என்றும் கத்தியுள்ளான். திடீ ரென்று அவன் தரையில் சுயநினைவில்லாமல் விழுந்த தைப் பார்த்த குடும்பத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
பரிசோதித்த மருத்து வர்கள் அவன் கடுமையான மாரடைப்பால் மரணம் அடைந்துவிட்டதாகக் கூறி னர். வெகுநேரம் மன அழுத்தத்துடன் போனில் கேம் விளையாடிக் கொண்டி ருந்து, அதில் தோல்வி அடைந்ததால் பர்கான் உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.