ராஞ்சி:
உத்தரப்பிரதேச மாநிலம் அரையா என்ற இடத்தில் கடந்த சனிக்கிழமை அதிகாலை சாலை விபத்து ஏற்பட்டது. இதில், பஞ்சாப்மற்றும் ராஜஸ்தானில் இருந்துவந்த வெளிமாநில தொழிலாளர் கள் 26 பேர் உயிரிழந்தனர். 30 பேருக்குபடுகாயம் ஏற்பட்டது. உயிரிழந்தவர்களில் 11 பேர்ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை தார்ப்பாலின் பையில் சுருட்டி, திறந்த வெளிலாரியில் உத்தரப்பிரதேச அரசு, ஜார்க்கண்ட்டிற்கு அனுப்பி வைத் துள்ளது.
இதே லாரியில்தான் விபத்தில் காயம் அடைந்தவர்களும் வந்துள் ளனர். ஜார்க்கண்டுக்கு செல்லும் வழியில் இந்த காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு, இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப்பிரதேச அரசின் மனிதமாண்பற்ற செயலுக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “வெளி மாநிலத் தொழிலாளர் களுக்கு மனிதாபிமானம் அற்ற சம்பவம் நடந்திருக்கிறது. தொழிலாளர்களின் உடல்களை லாரியில் அனுப்பியதை தவிர்த்திருக்கலாம். உத்தரப்பிரதேசம், பீகார் அரசுகள் முறையான ஏற்பாடு செய்து உடல்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், விபத்தில் பலியான தொழிலாளர்களின் உடல்கள் ஜார்க்கண்ட் எல்லைக்கு வரும்போது அதற்கு உரிய மரியாதைஅளிக்கப்பட்டு சொந்த ஊர்களுக்குஎடுத்துச் செல்லப்படும் என்றும்ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.