tamilnadu

img

வரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை!

லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலம் ஹரித்துவாகன்ச் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவருக்கு, அலிகாரின் பான் வாலி கோட்டியை சேர்ந்த ரபத் ஜெஹான் என்பவருடன் ஜனவரி 8, 2013-இல் திருமணம்நடைபெற்றுள்ளது. தற்போது நான்கு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.இந்நிலையில் தனக்கு விலை உயர்ந்த கார் மற்றும் ரூ. 10 லட்சம்வரதட்சணையாக கேட்டு, ரபத் ஜெஹானைத் துன்புறுத்தி வந்த அப்துல் ரஹீம், கடந்த 2018 நவம்பரில் 10-இல் திடீரென முத்தலாக் கூறிவிவாகரத்து செய்துள்ளார். ரபத் ஜெஹான், இதுதொடர் பாக கடந்த நவம்பர் 14-ஆம் தேதிஅலிகார் சிவில் லைன் பகுதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர்களும் விசாரணைக்கு பின் டிசம்பர் 1-இல் 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

ஆனால், ஓராண்டுக்கு மேலாகியும் ரஹீமை போலீசார் கைது செய்யவில்லை.பாதிக்கப்பட்ட ரபத் ஜெஹானின் சகோதரர், இதுதொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ‘முத்தலாக் கூறியஅப்துல் ரஹீம், பாஜகவின் மாநில நிர்வாகி என்பதாலேயே போலீசார் அவரைக் கைது செய்யாமல்காப்பாற்றப் பார்க்கிறார்கள்; அவர்களாகவே, எங்கள் இரு குடும்பங்களுக்கு இடையே சமாதானம் ஏற்பட்டு விட்டதாக போலி ஆவணங்களைக் காட்டுகின்றனர்” என்று குற்றம் சாட்டியுள்ளார். இதனிடையே, பாஜக பிரமுகர் அப்துல் ரஹீம், தில்லி கேட்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டிருப்பதாகவும் தகவல் கள் தெரிவிக்கின்றன.