tamilnadu

img

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவுகூட தராத பாஜக அரசு....

போபால்:
பல நாட்கள் கால்நடையாகவே சொந்த ஊருக்கு வரும் தங்களை மத்தியப்பிரதேச பாஜக அரசு உள்ளே விட மறுப்பதாக கூறி, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
குடிக்கத் தண்ணீர் கூடகிடைக்காமல், பலநாள் பட்டினியில் வந்த தொழிலாளர்கள், போலீசார் தடுத்ததால், ஆத்திரமடைந்து அவர்கள் மீது கற்களைவீசியும் கோபத்தை வெளிப் படுத்தியுள்ளனர்.

மத்தியப்பிரதேச மாநிலம்,பார்வானி மாவட்டத்தில் அமைந்துள்ள பகுதி செந்த்வா ஆகும். மகாராஷ்டிரத்திலிருந்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்திற்கு செல்லும் புலம்பெயர்ந்தவர்கள் கூடும் முக்கியபகுதியாகும். இங்கு ஒவ்வொரு நாளும்5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் தொழிலாளர்கள் வருகிறார்கள். கடந்தமூன்று நாட்களில், சுமார் 15 ஆயிரம் தொழிலாளர்கள் குவிந்துள் ளனர்.இந்நிலையில், அவர்கள் தங்களை ஊருக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கூறி வியாழனன்று ஆக்ரா - மும்பை தேசியநெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மூன்று நாட்களாக தங்கியிருக்கும் தங்களுக்கு உணவு கூட சரியாக வழங்கப் படாத நிலையில் அவர்கள் இந்த போராட்டத்தில் இறங்கினர். அப்போது, தொழிலாளர் களில் ஒருபகுதியினர் போலீசார்மீது கல்வீச்சிலும் ஈடுப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட் டுள்ளது.