போபால்:
மத்தியப் பிரதேச முன்னாள்முதல்வரும், பாஜக தலைவருமான சிவராஜ் சிங் சவுகான், குடியிருந்த வீட்டிற்கு 13 ஆண்டுகளாக மின் கட்டணம் செலுத்தவில்லை என்பது தெரிய வந் துள்ளது.மத்தியப்பிரதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சிவராஜ் சிங் சவுகான், ஆட்சியைப் பறிகொடுத்த நிலையில்,புதிதாக ஆட்சிப் பொறுப்பேற் றுள்ள காங்கிரஸ் அரசு, 1 லட்சத்து 22 ஆயிரத்து 833 ரூபாய்மின்கட்டணத்தைச் செலுத்துமாறு சிவராஜ் சிங் சவுகானுக்கு ‘பில்’ அனுப்பியுள்ளது.சிவராஜ் சிங் சவுகான், விடிஷா தொகுதி எம்.பி.யாக இருந்தபோது, அங்கு லீலா பாய் என்பவருக்குச் சொந்தமான ஒருவீட்டை வாடகைக்கு எடுத்து சுமார் 13 ஆண்டுகளாக குடியிருந்துள்ளார். இந்த 13 ஆண்டுகளும் அவர் தனது வீட்டிற்குமின்கட்டணமே செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது ஆட்சிமாற்றம் நடந்துள்ள நிலையில், சவுகானிடம் மின்சாரக் கட்டணத்திற் கான பில்லை மின்சார வாரியம் வழங்கியுள்ளது.பொறுப்பான பல பதவிகளை வகித்த சிவராஜ் சிங், 13 ஆண்டுகளாக மின்கட்டணம் செலுத்தவில்லை என்பது வெட்கக் கேடானது என்று காங்கிரஸ் விமர்சித் துள்ளது. மின் கட்டணம் செலுதாத காரணத்திற்காக, சிவராஜ் சிங் சவுகானின் வேட்பு மனுவேநிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும்; ஆனால், அவர் தேர்தலில்போட்டியிட்டு முதல்வர் பதவியையும் அனுபவித்துள்ளார் என்று மத்தியப்பிரதேச கல்வி அமைச்சர் ஜீது பட்வாரி கூறியுள்ளார்.