போபால்
மத்தியப்பிரதேசத்தில் உள்ள பெத்துல் மாவட்டத்தின் ஷோபாபூரில் பகுதியில் உள்ள தலித் பெண்ணும் அவரது மகளும் பாஜக தலைவர்களால் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஷோபாபூர் பகுதியில் ஒரு தலித் பெண்ணும் அவரது மகளும் பாஜகவின் நிர்வாகிகள் பலர் சேர்ந்துகொண்டு ஒருபெண்ணை தாக்கும் வீடியோ சமூக வலைதளைங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு பெண் ஆண்களால் தள்ளப்பட்டு கடுமையாக தாக்கப்படுகிறார். வீடியோ எடுப்பதாகத் தோன்றும் அவரது மகள், "என் அம்மாவை விட்டுவிடுங்கள், அதை நிறுத்துங்கள்" என்று அவர்களைக் கத்துகிறார்கள்.
மேலும், அதில் உள்ளாடை மட்டுமே அணிந்த பாஜக நிர்வாகி ஒருவர் பெண்ணின் முடியை பிடித்து பக்கவாட்டில் தள்ளுகிறார்.
தாக்குதல் நடத்திவர்களை தடுக்காத அருகில் இருந்தவர்கள், அந்த பெண்ணை மட்டுமே தடுக்கிறார்கள். இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் இது வரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. மேலும், தாக்குதல் நடத்தியவர்களை காவல்துறையே பாதுகாப்பு அளித்து வருகிறது.
இது குறித்து, சிவ்ராஜ் ஜி, உங்கள் அரசாங்கத்தின் கீழ் எங்கள் சகோதரிகளுக்கு இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன, குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், அந்தப் பெண்ணுக்கும் அவரது மகள்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும்" என்று கமல்நாத் ட்வீட் செய்துள்ளார்.