tamilnadu

img

அங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறையில் சமைப்பதில் தவறில்லையாம் !

அங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறையில் சமைப்பதில் தவறு இல்லை என்று மத்தியபிரதேச அமைச்சர் இமார்த்தி தேவி கூறி உள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டம் கரோரா அங்கன் வாடி மையத்தில் குழந்தைகளுக்கு கழிவறையில் வைத்து உணவு சமைக்கப்படுவதாக புகார் எழுந்தது. மேலும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் கழிவறை மேல் வைக்கப்பட்டுள்ளதாகவும் சிலிண்டர் மற்றும் ஸ்டவ் போன்றவையும் கழிவறையில் வைக்கப்பட்டுள்ளது. 
இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய பிரதேச அமைச்சர் இமார்த்தி தேவி வீட்டில் குளியலறையுடன் கழிவறை இருப்பதால் உறவினர்கள் தங்களது வீட்டில் சாப்பிட மறுப்பார்களா? என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் குளியலறையில் பாத்திரங்கள் வைக்கலாம். நமது வீடுகளிலும் பாத்திரங்கள் வைத்திருக்கிறோம். பயன்படுத்தப்படாத பாத்திரங்களை அடுக்கி வைக்கிறோம். அங்கன் வாடி மையத்தில் கழிவறைக்கும் சமைக்கும் இடத்திற்கும் இடைவெளி உள்ளது. இதனால் கழிவறைக்குள் சமைப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது. இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என அதிர்ச்சியூட்டும் வகையில் பேசி உள்ளார். அமைச்சரின் இந்த பொறுப்பற்ற பேச்சுக்கு சமூக நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.