லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலம் கிம்மத்தூர் கிராமத்தை சேர்ந்தவர், ராதாதேவி (50). ஏழை குடும்பத் தலைவியான இவர், மோடி அறிவித்த 500 ரூபாய் கொரோனா உதவித்தொகையைப் பெறுவதற்காக வங்கிக் கிளைக்கு சுமார் 60 கி.மீ. தூரம் நடந்தே சென்று, ஆனால், அங்கு பணம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
ராதா தேவிக்கு கூன் விழுந்த முதுகு. சரியாக நடக்க முடியாது. எனினும் வறுமைகாரணமாக 60 கி.மீ. நடந்ததும், அவரது முயற்சி ஏமாற்றத்தில் முடிந்ததும் ஊடகங்களில் வெளியாகி பலரையும் வேதனைஅடையச் செய்தது.இந்நிலையில், கருணை மனம் படைத்தசிலர், ராதாதேவியின் வங்கிக் கணக்கிற்கு, தங்களால் இயன்ற தொகையை உதவியாக செலுத்தியுள்ளனர். வெறும் 207 ரூபாய்மட்டுமே இருந்த, ராதா தேவியின் வங்கிகணக்கில் தற்போது 26 ஆயிரம் ரூபாய் சேர்ந்துள்ளது.இவ்வாறு, மக்கள் தங்கள் கஷ்டத்திற்கு இடையேயும் சக மனுஷிக்கு உதவி செய்ய முன்வந்துள்ள நிலையில், பொறுப் புள்ள ஆட்சியாளர்கள் ராதாதேவியைக் கண்டுகொண்டதாக தெரியவில்லை.