சுற்றுச்சூழலின் அதிகப்படியான மாசு மற்றும் வெப்பத்தின் காரணமாக, பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து வருவது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என ஐ.நா எச்சரித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது, பூமியின் வெப்ப அளவு நாளுக்கு நாள் அதிகரித்து, பருவநிலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாக வட துருவத்தில் பனிப்பாறைகள் தொடர்ந்து உருகி வருகிறது. இந்நிலை நீடித்தால் 2050ல் கடல் நீர் மட்டம் உயரும். அப்படி உயரும் போது சிறிய தீவுகள் மற்றும் நகரங்களில் உள்ள தாழ்வான இடங்களில் கடல் நீர் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தும் .மேலும் சுனாமி,வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றத்திலிருந்து உலகத்தை காப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.