கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து உலகம் முழுவதும் ஊரடங்கு அறிவித்து ,தற்போது பல்வேறு இடங்களில் தளர்வுகளும் ஏற்ப்பட்டு வருகிறது. இதை போல இலங்கையிலும் மார்ச் 20 முதல் ஜூன் 29 வரை ஊரடங்கு தொடர்ந்தது. ஊரடங்கால் 500,000 பேர் வேலை இலந்தனர், வேலையின்மை விகிதம் 10 ஆண்டுகளுக்கு இல்லாத வகையில் உச்சத்தை எட்டியுள்ளது.
ஊரடங்கு காரணமாக ஒரு சில இடங்களில் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக காட்டு விலங்குகளை வேட்டையாடினர்.ஒரு நாளைக்கு 600 காட்டு விலங்குகள் வேட்டையாடி கொல்லப்பட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் நயனகாரன் வெல்லா கூறுகிறார். நாட்டின் வனவிலங்கு பாதுகாப்புத் துறை (டி.டபிள்யூ.சி) இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுமார் 40 பேரை கைது செய்தது ,எனவும் அவர் கூறினார்.
இலங்கையில் சிறுத்தை என்பது 2015 ஆம் ஆண்டு நிலவரப்படி 700-950 எண்ணிக்கையை கொண்ட ஒரு ஆபத்தான விலங்கு ஆகும். கடந்த சில மாதங்களாக பல சிறுத்தைகளும் வலைகளைப் பயன்படுத்தி கொல்லப்பட்டுள்ளதாக குலோபல் வாய்ஸ் செய்தி ஊடகம் தெறிவித்துள்ளது..