tamilnadu

img

அபராத உயர்வை கண்டித்து மத்திய அமைச்சரின் வீடு முன் போராட்டம்

புதுதில்லி,செப்.11-  போக்குவரத்து விதிமீறல் அபராத உயர்வைக் கண்டித்து தில்லி யில் உள்ள மத்திய சாலைப்போக்கு வரத்துத்துறை அமைச்சர்  நிதின் கட்கரியின் வீடு முன்பு இளைஞர் காங் கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மோட்டார் வாகனச் சட்டத்தை கடுமையாக்கி மத்திய அரசு சமீபத்தில் திருத்தம் கொண்டு வந்தது. சாலை விதிகளை மீறுவோருக்கு அபராதம் பல மடங்கு  உயர்த்தப்பட்டது. இந்த அபராத உயர்வுக்கு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர்.  மேலும் சில மாநில அரசு களும் இந்த சட்டத்தை அமல்படுத்தா மல் கிடப்பில் வைத்துள்ளன. இந்நிலையில், போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத்தொகை உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லியில் மத்திய சாலைபோக்குவரத்து அமைச்சர்  நிதின் கட்கரியின் வீடு முன்பு இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.