tamilnadu

img

கஜகஸ்தான் விமானம் விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு

கஜகஸ்தானில் 100 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. 
கஜகஸ்தானின்  அலமட்டி நகரில் இருந்து, நூர்சுல்தான் நகருக்கு பெக் ஏர் பயணிகள் விமானம் இன்று காலை புறப்பட்டது.  95 பயணிகள், 5 ஊழியர்கள் என மொத்தம் 100 பேர் பயணித்த அந்த விமானம் புறப்பட்ட ஓரிரு நிமிடங்களில் அருகில் உள்ள கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் வீடுகள் இடிந்து விழுந்தன. விமானத்தின் ஒரு பகுதி நொறுங்கியது. 
இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.  தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.