மலேசிய ஓபன் பேட்மிட்டன் போட்டியின் 2வது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் நடந்த மலேசிய ஓபன் பேட்மிட்டன் விளையாட்டுப் போட்டியின் 2வது லீக் சுற்றில் தென்கொரிய வீராங்கனை சுங் ஜி ஹியூணை எதிர் கொண்ட இந்திய வீராங்கனை பி.பி.சிந்து 18-21, 7-21 என்ற நேர் சுற்றில் தோல்வியடைந்தார். வெறும் 43 நிமிடத்தில் முடிந்த இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்ததை தொடர்ந்து பி.வி.சிந்து மலேசிய ஓபன் தொடரிலிருந்து வெளியேறினார்.
ஆடவர் பிரிவில் நடந்த போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் தாய்லாந்து வீரர் கோசிட் பேட்பிரதாப்பை 21-11, 21-11 என்ற செட் கணக்கில் வெற்றி கொண்டார். இதன்மூலம் இவர் மலேசிய பேட்மிட்டன் தொடரின் காலிறுதியினுள் நுழைந்துள்ளார். காலிறுதியில் சீனா நாட்டு வீரர் ஒலிம்பிக் சாம்பியன் சென் லாங்கை இந்தியாவின் ஸ்ரீகாந்த் எதிர்கொள்ள உள்ளார்.