tamilnadu

img

கிராமப்புற மாணவர்களுக்கு விளையாட்டு அகாடமி துவங்கப்படும்

சேலம்:
கிராமப்புற மாணவர்களுக்கான விளையாட்டு அகாடமி அமைப்பேன் என ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு அறிவிக்கப்பட்ட பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் தெரிவித்துள்ளார்.சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுகா, பெரியவடகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தங்கவேலு மாரியப்பன் பாரா ஒலிம்பிக்கில் (நீளம் தாண்டுதல்) தங்கப் பதக்கத்தை வென்றார். இதனையடுத்து மத்திய அரசு இவருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாரியப்பன், மத்திய அரசு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதிற்கு தன்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி தெரிவித்தார். தற்போது பெங்களூருவில்இருப்பதாகவும் இவ்வாண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ள பாராஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளதாகவும், மீண்டும் அதில் பங்கேற்று இந்தியாவிற்கு தங்கம் பெற்றுத்தர முழுவீச்சில் பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த விருது தனது தாய்க்கும் பயிற்சியாளர்களுக்கும் சமர்ப்பணம் எனவும் தெரிவித்து, கிராமப்புற ஏழை மாணவர்கள் பலர் தகுதி இருந்தும் விளையாட்டுத் துறையில் சாதிக்க போதியவசதி இல்லாததால் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. எனவே, கிராமப்புற மாணவர்களுக்கு விளையாட்டு அகாடமி ஒன்றை விரைவில் தொடங்க உள்ளதாகவும் மாரியப்பன் தெரிவித்தார்.