ஓசூர்,ஜூன் 10- கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகராட்சிக்குட்பட்ட 43வது வார்டு பழைய மத்திகிரி எதிரில் வாலிபர் சங்க புதிய கிளை துவங்கப்பட்டது. மாவட்டத் தலைவர் ஸ்ரீதர், செயலாளர் சுரேஷ், பொருளாளர் முத்து, மாதர் சங்கத் தலைவர் வெண்ணிலா,வாலிபர் சங்க முன்னாள் தலைவர்கள் அனுமப்பா, மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். கிளைத் தலைவராக மல்லேஷ், செயலாளராக பூபதி, பொருளாளராக வசந்தகுமார் தேர்வு செய்யப்பட்டனர். பழைய மத்திகிரிக்கு செல்ல சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும், 200 வீடுகள் உள்ள இப்பகுதியில் இரண்டு தெருக்களுக்கு தெரு மின்விளக்கு வசதி செய்து தர வேண்டும், 15 ஆண்டுகளுக்கு முன்பு இலவசமாக தமிழகஅரசால் வழங்கப்பட்ட குடியிருப்புக ளுக்கு சாலை அமைத்து கொடுக்க வேண்டும், 5 ஆண்டுகளாக திறக்கப்படாமலே உள்ள மகளிர் சுய உதவிக் குழு கூடத்தை மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.