கிருஷ்ணகிரி, ஏப்.17- கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக் கோட்டை வட்டம் கெலமங்கலம் அருகில் உள்ளது குந்துமாரணப் பள்ளி கிராமம். இங்கு இரு நூறுக்கும் மேற்பட்ட குடும் பங்கள் உள்ளது. வெங்கடேஷ் தம்பதியரின் 8 வயது மகள் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் தந்தை வெங்கடேஷ், கூலி வேலைக்கு சென்ற நேரத்தில் உறவினரான 48 வயதாகும் தேவராஜ் என்பவன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள் ளான். இதுகுறித்து பெற்றோர்கள் கெலமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து, தேவராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த வாலிபர் சங்க வட்டச் செயலாளர் முத்து, விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் அனுமப்பா, கிளைச் செயலாளர் நாகராஜ் ஆகியோர் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினர்.பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தகுந்த மருத்துவம் அளிக்க வேண்டும், பெண் குழந்தைக் கான பாதுகாப்பு நிவாரண நிதி அரசு உடனே வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.ஜெயராமன் மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, தலைவர் வெண்ணிலா ஆகியோர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.