tamilnadu

மாணவிக்கு பாலியல் கொடுமை மாணவன் கைது

கிருஷ்ணகிரி, பிப்.24- கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பன ஹள்ளியில் உள்ள ஒரு பள்ளியில் பதினொன்றாம்  வகுப்பு படித்து வரும் மாணவி பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்தார். அப்போது  மாணவன் ஒருவன் பேச்சுக் கொடுத்துள்ளான். மது போதை யில் அங்கு வந்த மாணவனின் நண்பர்களான ராஜா (26), பட்டதாரி இளைஞர் மஞ்சுநாத் (22) இருவரும் மது கலந்த குளிர்பானத்தை மாணவியிடம் சாதாரண குளிர்பானம் எனக்  கொடுத்து பருக வைத்துள்ளனர்.  மயக்கமடைந்த மாணவியை மூன்று பேரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கடுமையாக பாதிக்கப்பட்ட மாணவி தனக்கு நேர்ந்தது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் தாய் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காரின் அடிப்படையில் காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, பள்ளிச் சிறுவனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இளைஞர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.