தருமபுரி, மே 14 - தருமபுரி மலைக்கிராம மக்களுக்குத் தேவை யான குடிநீர் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக் கப்பட்டது. தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியத்தில் ஜிட்டாண்ட அள்ளி, பிக்கன அள்ளி, ஜக்கசமுத்திரம் மற்றும் அண்ணாமலை அள்ளி ஆகிய ஊராட்சி களில் பெரும்பகுதி மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங் கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் இம்மலை கிராமங்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் வராததால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக குண்டாங்காடு, மாரியம்மன் கோயிலூர், கொத்தலம், தெத்துப்பள்ளம், சாமன்கொள்ளை, பொன்னேரிகுட்டை, ஜம்பூத் ஆகிய மலைக்கிரா மங்களுக்கு கடந்த ஒரு வருடமாக ஒகேனக்கல் குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீருக்காக வெகுவு தொலை செல்ல வேண்டிய நிலையும், விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பல முறை ஊராட்சி நிர்வாகத்தி டம் மக்கள் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் தற்போது கோடைக் காலம் நிலவி வருவதால் குடிநீருக்குக் கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இக்குடிநீர் பிரச்சனையை நிவர்த்தி செய்ய போர்க்கால நடவடிக்கையாக மலைக்கிராம மக்களுக்கு உடனடியாக குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங் கத்தின் பகுதி வட்டச் செயலாளர் சி. ராஜா வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து மனு அளித்தார்.