திருக்கழுக்குன்றம்,ஜூலை 3- காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம் அயப்பாக்கம் ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, பாலாற்றுக் கரையில் அமைக்கப்பட்டுள்ள 6 ஆழ்துளை கிணறுகளி லிருந்து மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் குடிநீர் ஏற்றப்ப ட்டு, தண்ணீர் விநியோகிக்க ப்பட்டு வந்தது. இந்நிலையில், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிக்கு குடிநீர் ஏற்ற பயன்படுத்தப்படும் மின்மோட்டார் மற்றும் குழாய்களை, ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காமல் உள்ளது. மேலும், பாலாற்றங்கரையில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் நீர்சுரப்பு குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், கடந்த 6 மாதமாக அயப்பாக்கம் பகுதிக்கு குடிநீர் கிடைக்கவில்லை. இது குறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுமக்கள் பலமுறை மனுக்கள் அளித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை இதனால், ஆவேசமடைந்த மக்கள் வாயலூர்-திருக்கழு க்குன்றம் செல்லும் சாலையில் காலிங்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் குழாய்கள் மற்றும் மின்மோட்டார்களின் மின்இணைப்புகள் சீரமைக்கப்படும் மற்றும் திறந்தவெளி கிணற்றில் தண்ணீர் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இதேபோல், நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள 21 வார்டுகளிலும் பல மாதங்களாக குடிநீர் பிரச்சனை தலைவிரித்தாடுவதை கண்டித்து பேரூராட்சி செயல் அலுவலகத்தில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.