செங்கல்பட்டு, ஜூலை 30- காஞ்சிபுரம் மாவட்ட த்தை, இரண்டாக பிரித்து செங்கல்பட்டை தலைமை யிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் துவங்குவது குறித்து கருத்துக் கேட்பு கூட்டம் ஆகஸ்ட் 5,6 ஆம் தேதியில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரி வித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- கடந்த 18 ஆம் தேதி நடைபெற்ற சட்டப் பேரவை கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் பெரியதாக உள்ள தால், நிர்வாக வசதிக்காக செங்கல்பட்டை தலைமை யிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் தோற்று விக்கப்படும் என முதலமை ச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, புதிய மாவட்டத்தை தோற்று விப்பது தொடர்பாக, சென்னை கூடுதல் தலை மைச் செயலர் மற்றும் வரு வாய் நிர்வாக ஆணையர் முனைவர் மு.சத்திய கோபால் தலைமையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகத்தில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி திங்களன்று 2 மணி முதல் 6 மணி வரையும், 6ஆம் தேதி 10 மணி முதல் 12 மணி வரையும் நடைபெறும். இதில் மாவட்டத்தில் உள்ள மக்களவை உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பி னர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், பொதுநல அமைப்புகள் மற்றும் பிற அமைப்பினரிடம் கருத்து கேட்கப் பட உள்ளது. அதேபோல், செங்கல்பட்டு வருவாய் கோட்ட அலுவலகத்தில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி 2.30 மணி முதல் 5.30 மணி வரை யும் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறும். எனவே செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் வருவாய் கோட்ட பகுதியிலுள்ள பொது மக்கள், தன்னார்வலர்கள், பொது நல அமைப்புகள் மற்றும் பிற அமைப்பினர் மேற்கண்ட தேதிகளில் கூட்டத்தில் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரி விக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.