கிருஷ்ணகிரி,ஜூன் 6-ஓசூர் காவேரி மருத்துவமனையில் அதிநவீன கருவியுடன் கூடிய நவீன இதய பரிசோதனை மற்றும் சிகிச்சை வசதி (கேத் லேப்) தொடங்கப்பட்டது. இப்புதிய இருதய ஆய்வக, மருத்துவப் பகுதியை ஆவ் டெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பிரபாகர் கடப்பா திறந்து வைத்தார்.மருத்துவ மனையின் மூத்த தலைவர்கள் மருத்துவர்கள் மணிவண்ணன், செல்வராஜ், இணை நிறுவனர், நிர்வாக இயக்குநர், செயல் இயக்குநர் மருத்துவர் விஜயபாஸ்கரன், இயக்குநர் மருத்துவர் அரவிந்தன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓசூரில் இருதய நோய் சார்ந்த மேம் பட்ட சிகிச்சைக்கு இந்த அதி நவீன கேத் லேப் மிகவும் உதவியாக இருக்கும். மிகவும் இக்கட்டான சமயத்தில் கூட இருபது நிமிடத்திற்குள் மருத்துவத்திற்கு நோயாளி வந்து விட்டால் 100 சதவீதம் காப்பாற்றும் அளவிற்கு உத்திரவாதம் உண்டு. ஆஞ்சியோ கிராம், ஆஞ்சியோ பிளாஸ்டி, ஐ.சி.டி, சிகிச்சைகள் மேற் கொள்ள முடியும். நோயாளிகளுக்கு தேவையற்ற கதிர் வீச்சு களை தவிர்க் கும். ரத்தக் குழாய்களில் அடைப்புகள் உள்ள பிரச்சனைகள், ரத்த ஓட்டம் உட்பட துல்லியமாக பரிசோதிக்க முடியும். துல்லியமான மருத்துவத்திற்கு குறைந்த செலவேயாகும். இந்த அதி நவீன வசதி பெங்களூரு-சேலம் இடையில் ஓசூரில் முதல்முறையாக அமைக்கப்பட்டுள் ளது சிறப்பம்சமாகும். அரசு மருத்துவக் காப்பீட்டு திட்டத்திலும் இதன் மூலம் மருத்துவம் பெறலாம். இதே நவீன மருத்துவ வசதி காவேரியின் திருச்சி, சேலம், காரைக்குடியிலும் உள்ளது. வர்த்தக நோக்கத்தில் இல்லாமல் சேவை நோக்கிலேயே செயல்படுவதாகவும் சிறப்பு மருத்துவர் பிரசன்னா உட்பட அனைத்து மருத்துவர்களும், நிர்வாகிகளும் கூறினர்.