சிதம்பரம், மார்ச் 25- உலக நாடுகளை அச்சு றுத்தி வரும் கொரானா வைர ஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு பல்வேறு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் வரும் 14 ஆம் தேதி வரை மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை தமிழகத்திலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கட லூர் மாவட்டம் சிதம்பரம் நக ராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதியிலும் அதிநவீன இயந்திரங்களை கொண்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. இதனை சிதம்பரம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் பாண்டி யன் ஆய்வு செய்தார். பின்னர் அடிக்கப்படும் மருந்தின் தன்மை குறித்து கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து துய்மை பணியில் ஈடுபடும் துய்மை பணியா ளர்களுக்கு சிதம்பரம் அம்மா உணவகத்தில் தயா ராகும் உணவின் தரத்தை யும் ஆய்வு செய்தார். மேலும் சிதம்பரம் நக ராட்சியில் அத்தியாவாசிய பொருட்கள் கிடைக்கும் காய்கறி கடைகள், மருந்த கங்களில் பொது மக்கள் ஒரு மீட்டர் இடைவெளியிட்டு நிற்க வேண்டும் என்று அறி வுறுத்தும் வகையில் அடை யாள குறியீடு ஒவ்வொறு கடைகளின் முன்பு வரைந்த னர். இந்த ஆய்வின் போது சிதம்பரம் நகராட்சி ஆணை யர் சுரேந்தர்ஷா, பொறியா ளர் மகாதேவன், சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன், ஆய்வாளர் முருகேசன் உள்ளிட்ட நகராட்சி பணி யாளர்கள் மற்றும் ஊழி யர்கள் தூய்மை பணி ஊழி யர்கள் உடனிருந்தனர்.