கிருஷ்ணகிரி, ஜூலை 27- கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் அருலாளம் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 30 ஆண்டுகளுக்கு முன்பு மலைவாழ் மக்க ளுக்காக அரசு கட்டித் தந்த 30 தொகுப்பு வீடுகளும் இங்கு உள்ளன. இந்த கிராமம் 6 கிலோ மீட்டர் தூரத்தில் காட்டிற்குள் சிறிய மலைப்பாங்கான பகுதியில் உள்ளது. இந்த பகுதி மக்களுக்கு முறை யான சாலை வசதி, குடிநீர், சுகாதார வசதிகள் ஏது மில்லை. நிலமற்ற இவர்கள் கிடைக்கும் கூலி வேலை செய்து பிழைப்பை நடத்தி வருகிறார்கள். தங்களது தொகுப்பு வீடு களை சீரமைக்கக் கோரி கடந்த 15 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்திடம் மக் கள் கோரிக்கை விடுத்து வரு கின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பிலும் இது குறித்து பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளன.
ஆனால் இதுவரை எந்த நட வடிக்கையும் எடுக்கப்பட வில்லை. ஏற்கனவே பல வீடுகள் இடிந்து போயுள்ளன. பெரும் பாலான வீடுகள் சிதில மடைந்து குடியிருக்க தகுதி யற்ற நிலையில் உள்ளன. சமீபத்தில் பெய்த மழையில் இரு வீடுகள் முற்றிலுமாக இடிந்து விழுந்தன. தற்போது தொடர் மழை பெய்து வருவதால் பல வீடு கள் சேதமடைய வாய்ப் புள்ளது. எனவே உயிர் சேதங்கள் ஏற்படுவதற்கு முன்பு அந்த வீடுகளை சீரமைக்க வேண்டும், முற்றிலுமாக இடிந்த வீடுகளுக்கு மாற்றாக புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும், சாலை, மின் விளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற் படுத்தித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.