tamilnadu

img

ஓசூர் பி.எம்.சி டெக் கல்லூரியில் ஆண்டு விழா

கிருஷ்ணகிரி, மார்ச் 15- ஓசூர் பெருமாள் மணி மேகலை பொறியியல், ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு நிறு வனத் தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். அறங்காவலர் மலர், செயலா ளர் குமார், ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி இயக்குநர் சுதாகரன், பொறி யியல் கல்லூரி முதல்வர் முனைவர் சித்ரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஓசூர் டேப் இந்தியா கம்பெனியின் துணைப் பொது மேலாளர்  நாகரா ஜன், திருச்சி உருமு தன லட்சுமி பொறியியல் கல்லூரி பேராசிரியர் முனைவர் மது ஆகியோர் சிறப்பு விருந்தின ராக  பங்கேற்று பேசினர். பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் சித்ரா, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் பால சுப்பிரமணியம், ஐடிஐ முதல்வர் பாபு ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர். இந்த விழாவில் தமிழக அரசு நடத்திய வாரியத் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு விருது களும்,  சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும்  சிறந்த மாணவருக்கான விருது வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை  கல்லூரி மக்கள் தொடர்பு அலுவலர் பேராசிரியர் விஜயகுமார் செய்திருந்தார்.