தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள குறிச்சி இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேசன் பள்ளி (ஐபிஇஏ) 17 ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை நடை பெற்றது. தமுஎகச மாநில கௌரவத் தலைவரும், ஐபிஇஏ கல்வி அறக்கட்டளை அறங்காவல ருமான எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் விழாவிற்கு தலைமை வகித்தார். ஐபிஇஏ பொதுச் செயலாளர் கிருஷ்ணன், துணைத் தலைவர் எஸ்.வி.வேணுகோபால், செயல் தலைவர் சிடி.சொக்கலிங்கம், துணைப் பொதுச் செயலாளர் எஸ்.சண்முக நாதன், அறங்காவலர் எஸ்.இளங்கோ, ஆலோசகர் கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் ஆர்.ஜெயபால், கல்வியாளர் முனைவர் என்.மாதவன் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கச் செயலாளர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி வாழ்த்திப் பேசினார். ஐபிஇஏ கல்வி அறக்கட்டளை தலைமை அறங்காவலர் ஆர்.சோமசுந்தரம், அறங்காவலர் எஸ்.ஜோசப் பீட்டர் நிகழ்ச்சியை ஒருங்கி ணைத்தனர். முன்னதாக தலைமையாசிரியர் இ.உஷாராணி வரவேற்றார். பள்ளித் தாளாளர் ஜி.பாலச்சந்திரன் நன்றி கூறினார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.