tamilnadu

img

மூடநம்பிக்கைகளுக்கு எதிராக தேசிய அறிவியல் மனப்பான்மை தினம்

கிருஷ்ணகிரி, ஆக.21- அறிவியலுக்கான கூட்டியக்கம் சார்பில் ஓசூர் ரயில் நிலையம் முன்பு தேசிய அறிவி யல் மனப்பான்மை தின இயக்கம் நடை பெற்றது.  மூடப்பழக்க வழக்கத்திற்கு எதிராகவும் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் விதமாகவும் முற்போக்காளர் நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்ட நாளை நினைவு கூர்ந்து இந் நிகழ்ச்சி நடைபெற்றது பகுத்தறி வாளர் கழகத்தின் சிவந்தி அருணாச்சலம் தலைமை தாங்கினார்.  அறிவியல் வளர்ப்போம் மூட நம்பிக் கையை ஒழிப்போம், பேச்சு சுதந்திரத்தை காப்போம், அனைவரையும் சமமாக நடத்து வோம், அதற்காக தமிழக அரசு மூட நம்பிக்கை  தடை சட்டம் கொண்டு வர வேண்டும் என வலி யுறுத்தியும், போலி அறிவியலுக்கெதிராக அறிவியல் மனப்பான்மையை வலியுறுத்தி யும் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை திமுக ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஏ. சத்யா முதல் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.  தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநில செயற்குழு உறுப்பினர் சிவக்குமார், தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டச் செயலாளர் பாலசுந்தம், மாரி யப்பன், தமிழ்நாட்டுக் கலை விழா செயலா ளர் சொக்கலிங்கம், ஓசூர் அனைத்து குடி யிருப்போர் நலச் சங்கத் தலைவர் துரை,  வித்யூ அறக்கட்டளை நிர்வாகி கிருஷ்ண மூர்த்தி, சமூக விஞ்ஞான ஆய்வரங்கம், இந்திய பேனா நண்பர்கள் சங்கம், விவ சாயிகள் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர்  சேதுமாதவன், அரசு ஊழியர் சங்க முன்னாள்  மாவட்டச் செயலாளர் ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டு அறிவியல் மனப் பான்மை வளர்க்க, மூடநம்பிக்கை ஒழிக்க,  அனைவரையும் சமமாக மதிக்க, போலி அறி வியல் ஒழிக்க, தேசம் காக்க உறுதிமொழி ஏற்றனர்.