tamilnadu

img

ரூ.10.52 லட்சம் கோடியை விழுங்க காத்திருக்கும் கார்ப்பரேட்டுகள்... ‘இந்தியன் ரேட்டிங் அண்ட் ரிசர்ச்’ நிறுவன ஆய்வில் தகவல்

கொல்கத்தா:
அடுத்த 3 ஆண்டுகளில், இந்தியாவைச்சேர்ந்த தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள், வங்கிகளுக்கு திருப்பிச் செலுத்தாத கடனின் அளவு, 10 லட்சத்து 52 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும் என்று ‘இந்தியன் ரேட்டிங் அண்ட் ரிசர்ச்’ நிறுவனம் கூறியுள்ளது.

வராக்கடன்கள் காரணமாக, தனியார் துறையைச் சேர்ந்த ‘யெஸ்’ வங்கி அண்மையில் கடும் நிதிநெருக்கடிக்கு உள்ளானது. வங்கியின் நிர்வாகத்தை தற்போது ரிசர்வ் வங்கி கையில் எடுத்துள்ளது. இதேபோல ஆக்சிஸ் வங்கி, லட்சுமி விலாஸ் வங்கிஉள்ளிட்டவைகளும் வராக்கடன் பிரச்சனையில் சிக்கியுள்ளன.இந்நிலையில், கொல்கத்தாவைச் சேர்ந்த ‘இந்தியன் ரேட்டிங் அண்ட் ரிசர்ச்’எனும் நிறுவனம் அண்மையில் 500 பெரியதனியார் பெருநிறுவனங்களின் கடன்கள் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.அதில், இந்த 500 நிறுவனங்கள் மொத்தம்செலுத்த வேண்டிய 39 லட்சத்து 28 ஆயிரம்கோடி ரூபாய் கடன் தொகையில், 7 லட்சத்து35 ஆயிரம் கோடி ரூபாயை செலுத்தாமல் உள்ளதாக கண்டறிந்துள்ளது. அத்துடன், இந்த நிறுவனங்கள் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான மதிப்பீட்டின் அடிப்படையில், அடுத்த 3 ஆண்டுகளில் மேலும் 2 லட்சத்து 54 ஆயிரம் கோடி ரூபாய்வராக்கடன்களாக மாறும் என்று கணித் துள்ளது.

இதன்மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் ‘ஏப்பம்’ விடவுள்ள வராக்கடன்களின் மதிப்பு 10 லட்சத்து 52 ஆயிரம் கோடியைத்தொடும் என்று ‘இந்தியன் ரேட்டிங் அண்ட்ரிசர்ச்’ தெரிவித்துள்ளது.மேற்கண்ட நிறுவனங்கள் உற்பத்திச்செலவுக்காகவே கடன்களை வாங்கியுள் ளன. தற்போது ஜிடிபி மிகவும் குறைந்து கொண்டே போகும் நிலையில், இந்த நிறுவனங்கள் பெரிதாக லாபமீட்ட வாய்ப் பில்லை. ஒருவேளை ஜிடிபி 4 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாக உயர்ந்தாலும் கூட, அப்போதும் 1 லட்சத்து 98 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவிற்கான வராக்கடன் உருவாவதைத் தடுக்க முடியாது என்று ‘இந்தியன் ரேட்டிங் அண்ட் ரிசர்ச்’ கூறுகிறது.2019-20 நிதியாண்டின் ஜிடிபி 4.7 சதவிகிதம்; 2020-21 நிதியாண்டின் ஜிடிபி 5.5 சதவிகிதம் என்ற கணிப்பின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.