tamilnadu

img

கொரோனா பரவல் எதிரொலி... மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்பு

கொல்கத்தா:
மேற்கு வங்க மாநிலத்தில் காலியாக உள்ள கொல்கத்தா பகுதி நகராட்சி மற்றும் 107 உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏப்ரல் 2-ஆம் வாரத்தில் தேர்தல் நடத்த அம்மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருந்தது.
 

இந்நிலையில், வெளிநாடுகளிருந்து வரும் பயணிகளால் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் மிதமான வேகத்தில் பரவிவருகிறது. இந்த சமயத்தில் தேர்தல் நடத்தினால் கூடுதல் பாதிப்பு எற்படும் என்பதால்,"அனைத்துக் கட்சி கூட்டத்தின் முடிவில் உள்ளாட்சி தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டதாகவும், அடுத்து எப்போது தேர்தலை நடத்துவது தொடர்பாக அடுத்த 15 நாட்களுக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும்" என தேர்தல் ஆணையர் சவுரவ் தாஸ் குறிப்பிட்டுள்ளார். 

கொரோனா அச்சம் காரணமாக ஆந்திர மாநிலத்தின் உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.