துஷார் வெள்ளப்பள்ளி கைது விவகாரத்தில் தலையிட்டு உதவி செய்யுமாறு கேரள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
கேரளாவின்,பாரத் தர்ம ஜனசேனா அமைப்பின் தலைவர் மற்றும் கடந்த நாடாளமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்ற துஷார் வெள்ளப்பள்ளி.ஐக்கிய அரபு எமிரட்ஸில் கட்டுமானம் தொழில் செய்துவந்தார்.இதில் ஏற்பட்ட நஷ்டத்தால் நசில் அப்துல்லா என்பவருக்கு கொடுக்கவேண்டிய பண பிரச்சனையால் ஐக்கிய அரபில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்குருக்கு
எழுதிய கடிதத்தில்,ஐக்கிய அரபு எமிரட்ஸில் துஷார் வெள்ளப்பள்ளி கைதானதை அறிந்தேன்.அவருடைய தற்போதைய நிலைமை என்னவென்று குறித்து அறியமுடியவில்லை.ஆகவே துஷாருக்கு சட்டரீதியான உதவி செய்யவேண்டும்.உடனே வெளியுறவுத்துறை தலையிட வேண்டுமென தெரிவித்துள்ளார்.