tamilnadu

img

மின்னல் வேகத்தில் செயல்பட்ட கேரள அரசின்  மனிதநேயம்

‘‘அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்.”- தம்முடைய மக்களின் சிறு  கைகளால் பெற்றோருக்கு ஊட்டப்ப டும் உணவு கூழாக இருந்தாலும் அது  அவர்களுக்கு அமிர்தத்தை விட மிக்க  இனிமை உடையதாகும் என்பது இக்குறளின் பொருள்.

ஆனால் அப்படிப்பட்ட குழந்தை செல்வங்களை பாதுகாக்க சொந்த கிராமங்களில் பொருளீட்ட இல்லாமல் வெளிமாநிலங்களுக்கு சென்று உழைத்த பெற்றோரின் மழலை மகன்கள் குட்டையில் மூழ்கி பலியாகி விட, அவர்கள் தங்கள் குழந்தையின் முகத்தை இறுதியாக காண மின்னல் வேகத்தில் செயல்பட்ட கேரளா அர சின் மனிதநேயம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

சங்கராபுரம் வட்டம் ரங்கப்பனூர் கிராமத்தில் தலித் பகுதியைச் சேர்ந்த  சக்திவேல், மஞ்சுநாதன் ஆகியோரின்  மகன்கள் முறையே தில்ஷன் (3) ரித்திக்  (6) ஆகியோர். சக்திவேல் மற்றும் அவ ரது தாய் தந்தை ஆகியோர் பிழைப்  பிற்காக கேரளாவிற்கு சென்றிருந்த போது கொரானா  ஊரடங்கு அறி விக்கப்பட்டு அங்கேயே இருந்தனர். இந்நிலையில் திங்களன்று (ஏப் 27)  குழந்தைகள் தில்ஷன், ரித்தின் இரு வரும் ரங்கப்பனூரில் உள்ள குட்டை யின் அருகே விளையாடிக் கொண்டி ருந்தபோது தவறி உள்ளே விழுந்துள்ள னர். குழந்தைகளை காணாமல் உறவி னர்கள் நீண்ட நேரம் தேடியபோது இருவரின் உடல்களும் குட்டையில் மிதந்ததை கண்டு மீட்டுள்ளனர்.

கேரளாவிலிருந்த சக்திவேல் உள்ளிட்டோருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. குழந்தையின் மறை வால் கதறித் துடித்த அவர்கள் ஊர டங்கால் அவர்கள் சொந்த ஊருக்கு வர இயலவில்லை. இச்செய்தியை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டக்குழு உறுப்பினர் ஏழு மலை மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலைக்கு தெரிய வந்தது. உடனடியாக கேரளாவி லிருந்த கண்ணூர் சிபிஎம் மாவட்ட செயலாளரோடு தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தார்.

மின்னல் வேகத்தில்  மனிதநேய வாகனம்

பின்னர் மின்னல் வேகத்தில் கம்யூ னிஸ்ட் மனிதநேய வாகனம் இயங்கத் தொடங்கியது. அவர் உடனடியாக மாநில முதல்வரை தொடர்பு கொண்டு  தகவல் தெரிவித்தவுடன் சம்பந்தப் பட்ட இடத்திற்கு செல்ல மாநில  அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திர னுக்கு உத்தரவிட்டார் முதல்வர் பின ராயி விஜயன். கண்ணூர் மாவட்டத்தில்  குழந்தையின் பெற்றோர் இருந்த பகு திக்குச் சென்ற அமைச்சர் சுரேந்திரன் உடனடியாக அந்த மாவட்ட ஆட்சி யரை தொடர்புகொண்டு உரிய பாது காப்பு ஏற்பாடுகளுக்கு உத்தரவிட்டு அதற்கான கடிதத்துடன் தனி ஆம்பு லன்ஸ் மூலம் சக்திவேல் குடும்பத்தி னரை அனுப்பி வைத்தனர்.  திங்களன்று (ஏப்.27) மாலை 6.30  மணிக்கு புறப்  பட்ட கேரள அரசு ஆம்புலன்ஸ் செ வாய்க்கிழமையன்று (ஏப்.28)  காலை 8.30 மணிக்கு ரங்கப்பனூரிலுள்ள வீட்டிற்கு வந்து சேர்ந்து அவர்கள் இறக்கி விடப்பட்டனர்.

மனிதம் மகத்தானது

தமிழகத்தின் எங்கோ ஒரு மூலை யில் இருக்கும் செல்லக் குழந்தையின்  முகத்தை அவர்களின் பெற்றோர் இறுதி யாக பார்க்க மின்னல் வேகத்தில் செயல்  பட்ட கேரள முதல்வர், அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் மனிதநேய செயல்பாடு ரங்கப்பனூர் மற்றும் சங்க ராபுரம் பகுதி மக்களிடையே மிகப்  பெரிய நெகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.  குழந்தைகளை இழந்த சோகத்தில் கண்ணீர்மல்க நின்றிருந்த பெற்றோர் மார்க்சிஸ்ட் கட்சியின் உள்ளூர் தோழர்களிடம் தங்கள் குழந்தைகளின் முகத்தை பார்க்க மனிதநேயத்தோடு பாடுபட்ட மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மிகுந்த நன்றியை தெரிவித்ததோடு மக்களை பாதுகாப்பதில் கேரள அரசின் நேர்மை யான செயல்பாடுகளை உணர்ச்சிபூர்வ மாக நெகிழ்ச்சியுடன் பாராட்டினர்.

வாலிபர் சங்கத்தின் தொடர் பணி

ஆனால் திங்களன்று மதியம்  முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இரு குழந்தைகளின் உடல்களும் செவ்வாயன்று மதியம் 2  மணிவரை உடற்கூறு பரிசோதனை செய்யப்படாமல் இருந்தது. பின்னர் அரசு மருத்துவமனைகளில் தன்னலம்  பாராமல் ரத்ததானம் செய்து வரும்  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்  நிர்வாகிகள் அந்த அறிமுகத்தின் வாயி லாக மருத்துவமனை நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசிய பின் இரண்டு  மணிக்குமேல் உடற்கூறு பரிசோத னைக்கு மருத்துவர் வந்துள்ளார்.

பாதுகாப்பில்லாத நிலை

சவக்கிடங்கில் இருந்து இரு குழந்  தைகளின் உடல்களையும் அக்குழந் தைகளின் பெற்றோர்களும் உறவினர்க ளும் பரிசோதனை செய்யும் இடத்திற்கு  தூக்கி வரச் சொல்லி உள்ளனர் மருத்து வமனை நிர்வாகத்தினர். கொரானா மருத்துவம் இங்கு நடைபெற்று வரும்  நிலையில் எந்த பாதுகாப்பு உபகரணங் களோ, உடைகளோ தரப்படாத சூழ லில் வேதனையின் உச்சத்தில் குழந்தை களின் பெற்றோரும், வாலிபர் சங்கத்தி னரும் உடல்களை தூக்கிச் சென்று பரி சோதனைக்கான இடத்தில் வைத் துள்ள சம்பவமும் நிகழ்ந்தது. பின்  னர் இரு சிறுவர்களின் உடற்கூறு பரி சோதனை முடிந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான ரங்கப்பனூருக்கு கொண்டுவரப்பட்டு பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டனர்.

-வி.சாமிநாதன்