tamilnadu

img

நாட்டின் மிகச்சிறந்த சுகாதார மையமாக கய்யூர் தியாகிகள் நினைவு குடும்ப நல மையம் தேர்வு

செருவத்தூர்:

கேரளத்தில் உள்ள கய்யூர் தியாகிகள் நினைவு குடும்ப நல மையம் நாட்டிலேயே மிகச்சிறந்த சுகாதார மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் தேசிய தரக்கட்டுப்பாடு உறுதிச்சான்று (National Quality Assurance Standard Certification) நிறுவனம் 99 மதிப்பெண்களுடன் இந்த சான்றிதழை வழங்கியுள்ளது. ஏற்கனவே, மாநில அரசின் ‘காயகல்பம்’ விருதினை இம்மையம் பெற்றுள்ள நிலையில் மத்திய அரசின் இந்த தேசிய அங்கீகாரமும் கிடைத்துள்ளது.


தற்போது, இம்மையத்தில் தினமும் நூறுக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். திருக்கரிப்பூர் பகுதியில் இயங்கும் ஒரே ஒரு சுகாதார மையம் இதுவாகும். பல்வேறு வகையான நோய்களுக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் இந்த சுகாதார மையத்தை தேசிய அளவில் உயர்த்தும் நோக்கத்துடன் மக்கள் பிரதிநிதிகளும் உள்ளாட்சி அமைப்புகளும் மருத்துவமனை நிர்வாக குழுவும் என்எஸ்எஸ் தன்னார்வலர்கள், ஜனமைத்ரி காவலர்கள், பல்வேறு துறையினர், மருத்துவர்கள், ஊழியர்கள், பொதுமக்கள், சுயஉதவி குழுக்கள் என அனைத்து தரப்பினரின் ஈடுபாடு தேசிய அளவில் முதலிடம் பெற உதவியுள்ளது. 


என்கியுஏஎஸ் மாநில அளவில் நடத்திய ஆய்வில் கய்யூர் தியாகிகள் நினைவு குடும்ப நல மையத்தின் சிறந்த செயல்திறன் கண்டறியப்பட்டுள்ளது. மையத்தின் முன்புறம் ரம்மியமான பூந்தோட்டம், தூய்மையான சுற்றுச்சூழல், நூலகம், என்டோசலட்பான் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு உட்பட இம்மையம் மிகுந்த ஆறுதலை அளித்து வருகிறது. 1980இல் ஊரக மருந்தகமாக (Rural Dispensary) துவக்கப்பட்ட சுகாதார மையம் பின்னர் ஆரம்ப சுகாதார மையமாக உயர்த்தப்பட்டது. ஆர்த்வம் திட்டத்தில் உட்படுத்தி குடும்ப சுகாதார மையமாக மாற்றப்பட்டுள்ளது. என்டோசல்பான் தொகுப்பு நிதியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இரண்டடுக்கு கட்டடத்தில் தற்போது இம்மையம் செயல்பட்டு வருகிறது.