tamilnadu

img

விமான நிலையம் தனியார்மயத்தை கைவிடக் கோரி பிரதமருக்கு 2 லட்சம் இ-மெயில்கள் சிபிஎம் முடிவு

திருவனந்தபுரம், ஆக.22- பெரும் ஊழலுக்கு வழிவகுக்கும் விதமாக மத்திய அரசு விமான நிலை யங்களை தனியார்மயமாக்கும் முடிவை மேற்கொண்டுள்ளது. நாட்டின் அனைத்து விமான நிலையங்களும், துறைமுகங்க ளும் அதானிக்கு என்பதே மத்திய அரசின் கொள்கை. இதற்கு எதிராக வலுவான போராட்டம் நடத்தப்படும். முதற்கட்டமாக 2 லட்சம் இ-மெயில் செய்திகள் பிரத மருக்கு அனுப்பப்படும் என சிபிஎம் மாநி லச் செயற்குழு கூட்டத்திற்கு பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் சிபிஎம் கேரள மாநிலச் செயலாளர் கொடியேரி பால கிருஷ்ணன் தெரிவித்தார். திருவனந்தபுரம் விமான நிலை யத்தை அதானி குழுமத்திற்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதி ராக அனைவரும் ஒன்றுபட்டு போராட்டக் களம் காண வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அதானி குறிப்பிடும் தொகையை அளிக்கலாம் என கேரள அரசு கூறிய பிறகும் விமான நிலையத்தை அதானிக்கு வழங்கியது ஊழல் செய்வ தற்காகத் தான்.

திருவனந்தபுரம் விமான நிலையம் ஒருபோதும் தனியார் மயமாக் கப்படக் கூடாது. அரசியல் கருத்து வேறு பாடுகளை விலக்கி வைத்து அனை வரும் ஒன்றாக நிற்க வேண்டும். அனை த்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். பொது நலனுக்கு எதிரான நிலைப்பாட்டை திரு வனந்தபுரம் எம்.பி சசிதரூர் மேற்கொண் டார். அவர் தனது நிலைப்பாடை மாற்றிக் கொள்ள வேண்டும். தனியார்மயத்தை இப்போது ஆத ரிக்கும் வி.முளீதரன்தான் முன்பு இதற்கு எதிராக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி னார். அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜக தவிர அனைத்துக் கட்சிகளும் வரவேற் கத்தக்க நிலைப்பாட்டை மேற்கொண் டன. சட்டமன்றம் இப்பிரச்சனையில் ஒன்று பட்டு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதுபோல் மக்களும் களத்தில் இறங்க வேண்டும் என்று கொடியேரி கேட்டுக் கொண்டார்.  

பணம் முதலீடு செய்து பிரச்சாரம்
பெருமளவில் பணம் முதலீடு செய்து நிபுணர் குழுக்களை களமிறக்கி இப்போது அரசுக்கு எதிரான பிரச்சாரம் நடத்தப்படுகிறது. இரண்டாம் லாவ்லின் என்கிற புதிய கதையை யுடிஎப் ஒருங்கி ணைப்பாளர் கூறுகிறார். முதலாவது லாவ்லின் காற்றில் பறந்தது யுடிஎப்கா ரர்களுக்கு தெரியாதா. அன்று யுடிஎப் உரு வாக்கியது ஒரு பொய் வழக்கு தானே என்று கொடியேரி கேள்வி எழுப்பினார்.  யுடிஎப் அரசு நடத்திய விஜிலன்ஸ் விசாரணையில் ஒரு சான்றுகளும் இல்லை என தள்ளுபடி செய்தது. ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்ட அதே நாள் காலை அந்த வழக்கை சிபிஐ விசா ரணைக்கு உம்மன்சாண்டி அனும தித்தார். மத்தியில் யுபிஏ அரசுக்கான ஆதரவை சிபிஎம் விலக்கிக் கொள்ளும் வரை அந்த வழக்கின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஆதரவு விலக்கிக் கொள்ளப்பட்ட உடன் பினராயி மீது குற் றஞ்சாட்டி வழக்கு பதிவு செய்யப்பட்டது.  

 தொடர்ச்சியாக கட்சியை வேட்டையா டுவதற்காகவே அந்த வழக்கு. இறுதி யாக சிபிஐ நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது. ஆனாலும் நிறுத்த வில்லை. உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. சிபிஐ நீதி மன்றம் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொண்டு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை யுடிஎப் அணியினர் ஒருமுறை படித்துப் பார்க்க வேண்டும். பினராயி விஜ யனை சிக்கவைக்க உருவாக்கப்பட்ட பொய் வழக்கு என்று நீதிமன்றம் கூறிய தல்லவா. இப்போது இல்லாத வழக்கை கூறிக்கொண்டு இரண்டாம் லாவ்லின் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். முதலா வது லாவ்லின் வழக்கில் நடந்ததுபோல் இப்போதைய பிரச்சாரம் எடுபடவில்லை. காரணம் அனைத்தும் பொய் பிரச்சாரம் என கொடியேரி கூறினார்.