tamilnadu

img

கொரோனாவை எதிர்கொள்ள தீவிர முயற்சி பயண விவரங்களை மறைத்தால் நடவடிக்கை தாமாக முன்வந்து தகவல் அளிக்க வேண்டுகோள்

பத்தனம்திட்டா, மார்ச் 9- கொரோனா வைரஸ் பர வும் பின்னணியில் பயண  விவரங்களை தெரிவிக்கா தோர் மீது நடவடிக்கை எடு க்கப்படும் என கேரள சுகா தாரத்துறை அமைச்சர் கே. கே.சைலஜா தெரிவித்தார். சீனா, தென் கொரியா, இத்தாலி, ஈரான், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகள் கட்டாய மாக விமான நிலையத்திலும் மற்ற இடங்களிலும் சுய மாக பயண விவரத்தை தெரி விக்க வேண்டும் என பரி ந்துரை செய்யப்பட்டுள்ளது. தகவல் தெரிவிக்காதோர் மீது சுகாதார சட்டத்தி ன்படி உரிய நடவடிக்கை எடு க்கப்படும். வேண்டுமென்றே தொற்றுநோய் பரப்புவதாக கருதி இத்தகைய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்ய ப்படும். அபராதமும், தண்ட னையும் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.       இத்தாலியிலிருந்து வந்த பத்தனம்திட்டா குடும்பம். விமான நிலையத்தில் மருத்துவ சோதனைக்கு உட்படாததைத் தொடர்ந்து சுகாதார நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. இவர்கள் நோயை மறை த்தது மற்றவர்களுக்கு பரவ  காரணமானது என பத்தன ம்திட்டா மாவட்ட ஆட்சியர்  கூறினார். நோயை மறைக்க வில்லை எனவும், யாருடைய தலையீடும் இல்லாமலேயே மருத்துவமனை சென்ற தாகவும் அந்த குடும்பத்தினர் கூறியதை மாவட்ட ஆட்சி யர் நிராகரித்தார். ஊர் திரு ம்பிய பிறகு இவர்கள் காய்ச்ச லுக்கு மருந்து வாங்கியுள்ள னர். உறவினர்களுக்கு நோய் அறிகுறிகள் தெரிந்த பிறகு சுகாதாரத்துறை கட்டா யப்படுத்தி இவர்களை மரு த்துவமனையில் சேர்த்தனர். இவர்கள் செய்தது பெரும் தவறு எனவும் ஆட்சியர் தெரிவித்தார். நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வய தான பெற்றோர்கள் கோட்ட யம் மருத்துவக் கல்லூரி மரு த்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பத்தனம்தி ட்டா கேஎஸ்ஆர்டிசி ஊழி யர்கள் பயோ மெட்ரிக் வரு கைப்பதிவு செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பேரு ந்தில் பணியாற்றும் ஊழி யர்கள் முக கவசம் (மாஸ்க்)  அணிய பரிந்துரை செய்யப்ப ட்டுள்ளது. பத்தனம்திட்டா நீதிமன்றத்தின் வழக்கமான நடவடிக்கைகள் ஐந்து நாட்க ளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு ள்ளன. பத்தனம்திட்டயில் 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள வெளி மாநில தொழிலாளர்க ளிடையே விழிப்புணர்வு ஏற்ப டுத்தவும் முடிவு செய்யப்ப ட்டுள்ளது. திருமணம்  போன்ற கொண்டாட்டங்க ளை சாத்தியமானால் இர ண்டு வாரங்கள் தள்ளி வை க்குமாறும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆறு பேருக்கு கொரோனா
பத்தனம்திட்டயில் ஐந்து  வயது, கொச்சியில் மூன்று  வயது சிறுவர்கள் உட்பட தற்போது மாநிலத்தில் ஆறு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு ள்ளது. பத்தனம்திட்டயில் மூன்றுபேர் இத்தாலியி லிருந்து ஊர் திரும்பியர்கள். இவர்களிடமிருந்தே மேலும் இரண்டு உறவினர்களுக்கு நோய் தொற்றியுள்ளது. கொச்சியிலும் இத்தா லியிலிருந்து ஊர் திரும்பிய குடும்பத்தில் உள்ள மூன்று  வயது சிறுவன் கொரோனா  பாதிப்புக்கு உள்ளாகியி ருப்பது திங்களன்று உறு தியானது. விமான நிலை யத்திலேயே இந்த குழந்தை க்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் சிலருக்கு நோய் தொற்று இருக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய கூட்டத்தில் தெரி விக்கப்பட்டுள்ளது. நோய்  பாதிக்கப்பட்டு ள்ளவர்களி டம் தொடர்பில் இருந்த வர்களை கண்டறியவும் நடவ டிக்கை மேற்கொள்ளப்ப ட்டுள்ளது.