tamilnadu

img

கேரள வங்கி துவங்க ரிசர்வ் வங்கி அனுமதி

திருவனந்தபுரம், அக்.11- கேரள அரசு துவங்கத் திட்டமிட்டிருக்கும் கேரள வங்கிக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. நவம்பர் முதல் தேதியி லிருந்து இவ்வங்கி செயல்பட உள்ளது.              கேரள அரசுக்குச் சொந்தமான, முழுக்க  முழுக்க சாதாரண ஏழை எளிய மக்களுக்கு சேவையளிக்க செயல்படும் விதத்தில் திட்டமிடப்பட்டு துவங்கவிருக்கும் அந்த வங்கிக்கு, “கேரள வங்கி” என பெயரை பரிந் துரை செய்து ரிசர்வ் வங்கியின் அனுமதிக்கு விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே, கூட்டுறவு வங்கிகள் கேரள பொருளாதா ரத்தில் முக்கிய பங்கை வகித்து வருகின்றன. அத்தகைய கூட்டுறவு வங்கிகளையும் இணைத்து ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் விதத்தில் இந்த வங்கியை உரு வாக்க  மாநிலஅரசு திட்டமிட்டுள்ளது. நாடெங்கிலும், உள்ள பொதுத்துறை வங்கிகளுக்கு சங்கு ஊதி, சமாதி கட்டும் வேலையைச் செய்து வரும் மத்திய அரசின் நவீன நாசகர பொருளாதாரக் கொள்கைக ளுக்கு மாற்றாக,  புதியதாக ஒரு பொதுத் துறை வங்கியை உருவாக்கும் முயற்சியே இது. மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளே ஏழை, எளிய மக்களின் பணத்தை பல்வேறு கட்டணங்கள் மற்றும் அபராதங்கள் மூலம் அபகரித்து, தங்கள் நம்பகத்தன்மையை இழந்து வரும் நிலையில், கேரள அரசின் இந்த வங்கி சாதாரண மக்களின் உற்ற துணை யாக திகழும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடையிலும் எழுந்துள்ளது.

அதோடு,முழு வீச்சிலான வங்கி சேவையை கணக்கில் கொண்டு,  மாநில அரசு ஒரு வங்கியை உருவாக்குவது, நாட்டி லேயே இதுவே முதல் முறையாகும்.  இத்தகைய புது முயற்சியில் இறங்கி யுள்ள கேரள இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு இத்திட்டத்தின் மூளையாக செய லாற்றி வருபவர் மாநில நிதியமைச்சரும் சிறந்த பொருளாதார வல்லுநருமான   டாக்டர் தாமஸ் ஐசக் ஆவார்.  மாநிலத்தில் உள்ள 13 மாவட்ட கூட்டுறவு வங்கிகள் கேரள வங்கியுடன் இணைய விருப்பம் தெரிவித்தன. எல்டிஎப் அரசின் முயற்சியை தடுக்கும் நோக்கத்துடன் யுடிஎப் தலைமையில் உள்ள மலப்புறம் மாவட்ட கூட்டுறவு வங்கி இணைப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது. இந்நிலையில் இணைப்புக்கான ஒரு மசோதாவை கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றி ரிசர்வ் வங்கி யின் அனுமதியை கேரள அரசு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.