திருவனந்தபுரம்:
வெளிநாடுகளில் இருந்து வருவோர் கோவிட் பரிசோதனை நடத்தியிருக்க வேண்டும் என்பதை அவர்களுக்கு எதிரான ஒன்றாக பிரச்சாரம் செய்வது கெடுதல் விளைவிக்கும் நகர்வு எனவும், பேரழிவின்போதும் மக்களது பொது சுகாதாரத்தில் அரசியல் விளையாட்டு கூடாது எனவும் மத்திய அமைச்சர் வி.முரளீதரனுக்கு பதிலளித்து கேரள முதல்வர் பினராயிவிஜயன் கூறினார்.புதனன்று கோவிட் ஆய்வுக்கூட்டத்திற்கு பிறகு திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மேலும் கூறியதாவது: கெடுவாய்ப்பாக ஒரு மத்திய துணை அமைச்சர் இத்தகைய பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். கோவிட்பாதிப்புக்கு உள்ளானவர்களை மாநிலத்திற்குள் அனுமதிப்பதில்லை என எப்போதும் கூறியதில்லை. நோய் தொற்று ஏற்பட்டவர்களை அந்தந்த நாடுகளில் பரிசோதிக்க வேண்டும் என்றுதான் அன்றும் இன்றும் கூறப்பட்டது. அதல்லாமல் நோய் உள்ளவர்கள் அங்கேயே இருக்கட்டும் என்பதல்ல நிலைபாடு.
மார்ச் 11இல் மத்திய துணை அமைச்சர் வி.முரளீதரன் கூறியது, ‘நோய் உள்ளவர்களும் இல்லாதவர்களும் ஒரே விமானத்தில் பயணம்செய்தால் நோய் பரவும். அந்தந்த நாடுகளிலேயே பரிசோதனை நடத்தி நோய் இல்லாதவர்களை அழைத்து வருவதும், நோய் உள்ளவர்களுக்கு அங்கேயே சிகிச்சை அளிப்பதுமே பயனளிக்கும்’ என்று அப்போது அவர் கூறினார். மேலும் அவர் இப்படி கேட்டார், ‘இவரிடம்யார் கூறியது, கொரோனா டெஸ்ட் இல்லாமலேஅழைத்து வருகிறோம் என்று? நாங்கள் அங்குடெஸ்ட் நடத்திய பிறகே விமானத்தில் ஆட்களைஇங்கே கொண்டுவர முயன்று வருகிறோம். அனைவரையும் அவர்கள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பே டெஸ்ட்டுக்கு உட்படுத்துவோம். அதன்பிறகே விமானத்தில் ஏற்றுவோம்’,என்று கூறிய முரளீதரன் இப்போது அதிலிருந்துமாறுபடுகிறார்.
பரிசோதனை இல்லாமல் வருவது நோய்பரவலை அதிகரிக்கும் என மாநிலம் அச்சமடையும் நிலையில் தற்போது மத்திய துணைஅமைச்சர்,‘ கேரளம் டெஸ்ட் குறித்து கூறுவது பெரும் பாவச்செயல்’ என்பதுபோல் பிரச்சாரம் செய்வதை முதல்வர் சுட்டிக்காட்டினார். மே 5 ஆம் தேதி அப்படி கூறிய பிறகு என்னஅற்புதம் நிகழ்ந்துவிட்டது இப்படி நிலைபாடு மாற்றுவதற்கு? அதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும். கோவிட்டால் பாதிக்கப்பட்டவர் பிறருடன் ஒரே விமானத்தில் பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். நோய் பரவலை தடுக்க இது அவசியமாகும். நோய்தொற்று உள்ளவர்களால் பயணம் மேற்கொள்ளமுடியும் என்றால் அவர்களை தனி விமானத்தில்அழைத்து வருவது குறித்து பரிசீலிக்க வேண்டியது மத்திய அரசு. அப்படி வருகிறவர்களுக்கு கேரளத்தில் சிகிச்சை அளிக்கப்படும்.
வந்தேபாரத் மிஷனின் பகுதியாக இயக்கப் படும் விமானங்களுக்கு தூதரகம் மூலம் பயணிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தகுதியானவர்களுக்கு முன்னுரிமை கிடைப்பதை உறுதி செய்யுமாறு தூதரகங்களை மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வேண்டுகோள் பலமுறை விடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் முறையாக தேர்வு செய்யப்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல் அவர்களது முன்னுரிமையை குறிப்பிட்டு தூதரகம் இணைய தளத்தில் வெளியிட வேண்டும்.
பயணிகள் பட்டியல் கடைசி நேரத்தில் அல்லாமல் விமானம் புறப்படுவதற்கு மூன்று நாட்கள் முன்னதாக வெளியிட வேண்டும்.பத்து மணி நேரத்துக்குமேல் பயணம் செய்யவேண்டி நாடுகளில் இருந்து வருவோர் பெரும்பாலும் தில்லியிலோ மும்பையிலோ இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இத்தகைய விமானங்களில் கேரளத்துக்கான பயணிகள் ஏராளம். இதை கருத்தில் கொண்டு அத்தகைய விமானங்களை கேரளத்தில் உள்ள ஏதேனும் ஒருவிமான நிலையம் வரை நீட்டிக்க மத்தியஅரசு உத்தரவிட வேண்டும். அதன் மூலம் கேரளத்துக்கு வெளியே அவர்கள் தனிமைக் காலம்மேற்கொள்வதை தவிர்க்கலாம். இத்தகையபயணிகளுக்கு தனிமைக்கான விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். 10 மணி நேரத்
துக்குமேல் பயணிக்க வேண்டிய தொலைதூரநாடுகளுக்கு பெரிய விமானங்களை பயன் படுத்த வேண்டும். ஏர் இந்தியாவால் போதிய விமானங்களை இயக்க முடியாவிட்டால் இதரவிமான நிறுவனங்களில் இருந்த வாடகைக்கு எடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும். கோவிட் கொள்ளைநோய் ஏற்படுத்திய நெருக்கடியைத் தொடர்ந்து வேலை இழந்த வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசு அவசர உதவி வழங்குவது அவசியமாகும். வேலை இழந்த இவர்களுக்கு அந்த நாடுகளில் சமூக பாதுகாப்பற்ற நிலையும் ஏற்பட்டுள்ளது என்பதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என முதல்வர் கூறினார்.