திருவனந்தபுரம்:
வெளிநாடுவாழ் இந்தி யர்கள் (என்ஆர்ஐ) கேரளத்தில் மூதலீடு செய்வ தற்கு ஏதுவாக, புதிய முதலீட்டு நிறுவனம் ஒன்றை கேரள அரசு தொடங்க உள்ளது.கேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இத்தகவல் தெரி விக்கப்பட்டுள்ளது.மலையாளிகளில் அதிகமானோர் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அரபு நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பணியாற்றுகின்றனர். அவர்கள் மூலமாக, வளைகுடா நாடுகள், ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவிலிருந்து கேரளத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு 1.5 லட்சம் கோடி ரூபாய் அந்நிய செலாவணி வருகிறது.
எனவே, வெளிநாடுகளில் உள்ள மலையாளிகள், கேரளாவில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கவும், அதை பயன்படுத்தி கேரளாவின் கட்டுமான திட்டங்கள் போன்றவற்றை சிறப்பாக செயல்படுத்தவும் ‘என்.ஆர்.கே இன்வஸ்ட் மெண்ட் அண்ட் ஹோல்டிங் நிறுவனம்’ என்பதை தொடங்க உள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் அலுவலக செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.74 சதவிகித என்.ஆர்.ஐ. மலையாளிகள் மற்றும் 26 சதவிகித மாநில அரசு பங்களிப்புடன் கூடிய இந்த முதலீட்டு நிறுவனத்திற்கு கேரளா அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த ஆண்டு நிகழ்ந்த வெள்ளப் பாதிப்பின் பின்னணியில், கேரளத்தைப் புரனமைக்கும் ன்முயற்சியின் ஒருபகுதியாக துவங்கப்பட உள்ள இந்த முதலீட்டு நிறுவனத்தில், என்.ஆர்.ஐ வணிகர்களின் பங்களிப்பும் இருக்கும் என்று கூறப்படுகிறது.