tamilnadu

img

தேசிய குடிமக்கள் பதிவேடு: கேரள அரசு ஒத்துழைக்காது

திருவனந்தபுரம்:
தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) புதுப்பிக்கும் நடவடிக்கையுடன் கேரள அரசு ஒத்துழைக்க முடியாது என முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்தின் அடிப்படையில் தேசிய மக்கள்தொகை பதிவுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் தேசிய குடிமக்கள்பதிவுக்கு (என்ஆர்சி) இட்டுச் செல்லும் என்கிற மக்களது கவலையின் அடிப்படையில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய குடியுரிமை மக்கள் பட்டியல் தயாரிக்க உதவும் வகையில் தேசிய மக்கள்தொகை பதிவேடு புதுப்பிக்கும் நடவடிக்கையுடன் எக்காரணம் கொண்டும் மாநில அரசு ஒத்துழைக்காது. பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கணக்கெடுப்புக்கு (சென்சஸ்) அனைத்துவிதமான ஒத்துழைப்பையும் அரசு வழங்கியுள்ளது.மக்கள்தொகை கணக்கெடுப்பு தவிர்க்க முடியாத புள்ளிவிவரங்கள் காரணமாக ஒத்துழைப்பு அளிக்க மாநில அரசு கடமைப்பட்டுள்ளது. ஆனால், அரசமைப்பு சாசன விழுமியங்களிலிருந்து கவனச்சிதறல் மற்றும் உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் இப்பிரச்சனைஉள்ளதாலும் இதுபோன்ற தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிக்க துணை நிற்க முடியாது எனவும் முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது.