விமான ஓடுதளத்தில் ஒரு விமானம் இரண்டாக உடைந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் தற்போது மழை பெய்து வருகிறது. அதனால் அங்கு நிலப்பரப்பு ஈரப்பதமாக இருந்ததாகத் தெரிகிறது. துபாயில் இருந்து இந்தியர்களை வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தாய்நாடு நோக்கி கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு அழைத்து வந்த ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் இரண்டாக உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் விமானம் துபாயில் பிற்பகல் 1; 30 மணிக்கு இந்த விபத்து நடைபெற்ற நேரம் மாலை 7; 41 ஆகும்.
விமானம் ஒடுதளம் மேடான பகுதி என்பதால் ஓடுபாதையில் இருந்து விலகி,
கீழே கால்வாய் பகுதியில் விழுந்து இரண்டாக உடைந்துள்ளதாகவும் இரவு நேரமானதாலும்,
அங்கு பலத்த மழை தேங்கி பள்ளமாக உள்ளதால் மீட்பு நடவடிக்கை சுணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனை உடனடியாக சரிசெய்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள் .
இந்த விமான விபத்து குறித்த உதவிகளை அமைச்சர் மொய்தீன் கவனிப்பார் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி பினராயி விஜயனிடம் தகவல் கேட்டு அறிந்துள்ளார்.
கோழிக்கொடு விமான விபத்து குறித்து பயணிகளின் உறவினர்கள் பதற்றம் அடையாமல் இருக்க இலவச எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
056 546 3903, 054 309 0572, 054 309 0572, 054 309 05752, 0483 271 9493 எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து அதிர்ச்சி அடைந்ததாக முன்னாள் காங்கிரஸ் தலைவரும் எம்பியுமான ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மேலும் அவர்களுக்காக பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுவரை விமானி உள்பட 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகிறது. தொடர்ந்து இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.