திருவனந்தபுரம், செப்.22- திருவனந்தபுரத்தில் உள்ள கரமனா முதல் தமிழ்நாடு எல்லையான களி யக்காவிளை வரையிலான தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி தீவிர மாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாலராமபுரத்தில் சுரங் கப்பாதை அமைப்பதற்கான மண் பரி சோதனையை பொதுப்பணித்துறை யினர் துவக்கியுள்ளனர். பாலராமபுரத்தில் நான்கு சாலை கள் சந்திக்கும் பகுதியில் நிலத்தை தோண்டி வருகின்றனர். இதன் மூலம் மண்ணின் உறுதி தன்மை பாறை, நீர் இருப்பு போன்றவற்றை கண்டறிய உள்ளனர். கடந்த ஒருவார காலமாக 32 மீட்டர் ஆழம் வரை ஆய்வு செய் துள்ளனர். 22 மீட்டருக்கு பிறகு பாறை இருப்பது தெரிய வந்துள்ளது. மண் ஆய்வில் தெரியவரும் விவரங்கள் அடிப்படையில் சுரங்கப்பாதைக்கான வடிவமைப்பு தயாரிக்கப்பட உள்ளது. சுரங்கப்பாதை அமைப்பதன் முலம் விழிஞ்ஞம் சாலையில் குழிச்சாணி முதல் காட்டாக்கடை சாலை தேம்பா முட்டம் ரயில்வே லைன்வரை வளை வில்லாத சாலை அமைக்கப்படும். இரண்டாம் கட்டமாக பிறாவச்சம்பலம் முதல் கொடிநடவரை உள்ள 5.5 கிலோ மீட்டர் சாலை அமைக்கப்படும். கிப்பி திட்டத்தின் கீழ் இந்த பணி மேற்கொள் ளப்படுகிறது.
கட்டுமானப் பணியில் ஊராளுகள் கூட்டுறவு சங்கம்
ரூ.112 கோடி மதிப்பீட்டில் அமைக் கப்படும் சாலையின் கட்டுமான பொறுப்பு ஊராளுகள் ஒப்பந்த தொழி லாளர் கூட்டுறவு சங்கத்திடம் ஒப்ப டைக்கப்பட்டுள்ளது. சாலை வளர்ச்சி யின் பகுதியாக பிறாவச்சம்பலம் முதல் கொடிநட வரை உள்ள சாலையின் இரண்டு பக்க எல்லை நிர்ணயிக்கப் பட்டு கல்லிடும் பணி முதலில் நடை பெற்றது. தொடர்ந்து சாலைக்கான பகுதி சமன் செய்யப்பட்டுள்ளது. விபத்து பகுதியான பாரூர்குழியில் சிறு பாலம் அமைக்கும் பணி துரிதகதியில் நடைபெற்று வருகிறது. கொடிநட முதல் வெடிவச்சான் கோயல் வரை மின் பாதையை மாற்றி புதிய கம்பங் கள் நடப்பட்டு மின்கம்பி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பள்ளிச்சல் பஞ்சாயத்து அலு வலக கட்டடம் இடித்து அகற்றப்பட்டு வருகிறது. இரவும் பகலுமாக விடு முறை நாட்களிலும் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. பள்ளிச்சல் பஞ்சாயத்து அலுவலகம் பிறாவச் சம்பலம் இஎம்எஸ் நகரில் உள்ள கிருஷி பவனில் செயல்பட்டு வருகிறது. ஓராண்டுக்குள் இந்த சாலையை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுரங்கப்பாதை கட்டுமானமும் சாலை கட்டுமானமும் நிறைவடையும்போது தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும்.