tamilnadu

img

ஊடகத்தினரின் பாதுகாப்புக்கு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.... கேரள சட்டமன்றத்தில் முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தல்

திருவனந்தபுரம்:
சட்ட திருத்தத்தின் மூலம் ஊடகத்தினருக்கு அரசமைப்பு சாசன ரீதியான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என கேரளமுதல்வர் பினராயி விஜயன் கூறினார். கேரள சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா சமர்ப்பித்த அறிக்கைக்கு பதிலளித்து அவர் மேலும் கூறியதாவது :  ஊடகத்தினருக்கு அரசமைப்பு சாசன ரீதியான பாதுகாப்பை உறுதிப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட திருத்தம் செய்வதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள ஊடகத்
தினர் பயனடைவர்.

இதை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லலாம். மாநில அரசின் வரம்புக்குள் வராதது என்பதால் சட்டமன்றத்தில் இதற்காக தீர்மானம் கொண்டு வரலாம். அதே நேரத்தில், சட்டம் கொண்டுவருவது ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக என்பதாக இருக்க வேண்டும். இப்போதைய சூழ்நிலையில் துலக்குவதற்காக தேய்த்து பாத்திரமே தேய்ந்து போனது போல் ஆகிவிடக்கூடாது. தற்போதைய நிலையில் ஊடகத்தினருக்கு பாதுகாப்பான மாநிலம் கேரளமாகும். 

பத்திரிகை சுதந்திரத்தையும் அதன் புனிதத்தையும் நிலைநாட்டுவதில் அரசியல் கட்சிகளும் கவனம் செலுத்த வேண்டும். கட்டணச் செய்திகள் போன்றவற்றிலிருந்து விலகி நிற்க வேண்டும். இந்தியாவில் நீண்டகாலம் ஆட்சி செய்தவர்களுக்கோ அல்லது தற்போதைய ஆட்சியாளர்களுக்கோ ஊடகங்களைப் பாதுகாக்கும் சட்டத்தை இயற்ற வேண்டும் என்கிற எண்ணம் தோன்றவில்லை. இந்தியாவில் பத்திரிகைக்கு எதிரான மிகப்பெரிய தாக்குதல் அவசரநிலை காலத்தின் போது நடந்தது. அன்று  அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் தான் பின்னர்போடா, தடா போன்ற கடுமையான சட்டங்களை இயற்றியது. அந்த கறுப்புச் சட்டங்களுக்கு பலியானவர்களில் பத்திரிகை யாளர்களும் அடங்குவர்.  

ஊடகத்தினரிடம் மதத்தை கேட்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்று இந்தியாவில் ஊடகவிய லாளர்கள் கொலை செய்யப்படும் சூழ்நிலை உள்ளது. கவுரி லங்கேஷ்,சாந்தனு பவுமிக் உள்ளிட்ட 22பத்திரிகையாளர்கள் கடந்த நான்குஆண்டுகளில் கொல்லப்பட்டுள்ள னர். ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தடுக்க கேரளாவில் தற்போதுள்ள சட்டங்கள் திறம்பட பயன்படுத்தப் படுகின்றன. இதில் வெற்றியும் கிடைத்துள்ளது என்று முதல்வர் கூறினார்.