tamilnadu

தங்க கடத்தல் வழக்கில் நால்வர் மீது எப்ஐஆர் கொச்சி என்ஐஏ நீதிமன்றத்தில் தாக்கல்

கொச்சி, ஜூலை 11- தங்க கடத்தல் வழக்கை விசாரிக்கும் தேசிய விசா ரணை முகமையின் (என்ஐஏ) கொச்சி அலகு நான்கு பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சுங்கத்துறையினர் ஏற்கனவே கைது செய்த யுஏஇ தூதரக முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரி சரித்தை முதல் குற்றவாளி யாக கொச்சி என்ஐஏ நீதி மன்றத்தில் வெள்ளியன்று தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப் பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள சொப்னா சுரேஷ், ஷார்ஜாவில் இருந்து தூதர கத்துக்கு தங்கம் அனுப்பிய பசல் பரீத், முக்கிய புள்ளி சந்தீப் நாயர் ஆகியோர் குற்றவாளிகள் பட்டியலில் அடுத்துடுத்து இடம் பெற்றுள்ளனர். சுங்கத்துறை விசா ரிக்கும் வழக்கை மறு பதிவு செய்து மூத்த அரசு வழக்க றிஞர் அர்ஜுன் அம்பலப் பற்ற முதல் தகவல் அறிக்கை யை தாக்கல் செய்தார்.

சட்டவிரோத செயல்பாடு களை தடுக்கும் சட்டம் (யுஏபிஏ) 16,17,18 பிரிவுக ளின் கீழ் குற்றம் சாட்டப் பட்டுள்ளது. தேவையெனில் கூடுதல் பிரிவுகள் பின்னர் சுமத்தப்படும் என என்ஐஏ தெரிவித்துள்ளது. தேச பாது காப்புக்கு அச்சுறுத்தல், கூட்டுச்சதி, தங்க கடத்த லுக்கு பின்னணியில் சர்வ தேச தொடர்பு, தீவரவாத செயல்களுக்கு பொருளா தார உதவி போன்றவற்றை என்ஐஏ விசாரிக்கும். கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.விஜயராகவன் என்ஐஏவுக்காக வாதாடு வார். முன்னதாக மற்றொரு வழக்கறிஞரின் பெயர் பரிசீலிக்கப்பட்டது. அவர் என்ஐஏ வழக்குகளில் தொடர்ந்து வாதாடியவர். ஆனால், அரசு வழக்கறிஞர் அல்லாதவர் என்பதால் மற்ற வழக்குகளையும் நடத்தி வந்தார். தங்க கடத்தல் வழக்குகளில் குற்றவாளிக ளுக்காக சுங்கத்துறைக்கு எதிராகவும் வாதாடி யுள்ளார். எனவே, அவரை என்ஐஏவின் வழக்கறிஞராக வாதாட சுங்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது.