tamilnadu

img

கேரள அரசு தயாரிப்பில் மின்சார ஆட்டோ முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைத்தார்

திருவனந்தபுரம்:
கேரள அரசு நிறுவனமான கேரள ஆட்டோமொபைல்ஸ் லிமிட்டெட் (கே ஏஎல்) தொழிற்சாலையில் மின்சார ஆட்டோ உற்பத்தி யை கேரள முதல்வர் பின ராயி விஜயன் வியாழனன்று துவக்கி வைத்தார். கேரள ஆட்டோமொ பைல்ஸ் லிமிட்டெட் நிறுவனம் ‘கேரளா நீம் ஜி’ என்கிற  பெயரில் கடந்த ஐந்து மாதங்களாக மின்சார ஆட்டோ (இ-ஆட்டோ) வடி வமைப்பில் ஈடுபட்டுள்ளது. அதன் உற்பத்தியை முதல்வர் பினராயி விஜயன் முறைப்படி துவக்கி வைத்தார். முதல் கட்டமாக  ஆண்டுக்கு 8 ஆயிரம் மின்சார ஆட்டோக்கள் சந்தையில் இறக்க திட்டமிடப் பட்டுள்ளது. கிலோ மீட்டருக்கு 50 காசுகளே இதற்கான நடைமுறை  செல வாகும். பராமரிப்பு செலவும் பெருமளவுக்கு மிச்சமாகும். சுவிஸ் நிறுவனமான ஹெஸ் வழங்கும் தொழில்நுட்பஉதவியுடன் கேரள மாநிலசாலை போக்குவரத்து கழ கத்துக்கு (கேஎஸ்ஆர்டிசி) தேவையான மின்சார பேருந்துகளை 9 மாதங்களில் உற்பத்தி செய்யவும்கேஏஎல் முடிவு செய்துள்ளது.

கேஏஎல்-இன் நவீன இயந்திரங்களையும் முதல்வர் இயக்கி வைத்தார். நெய்யாற்றின்கரை ஆறாலு மூட்டில் உள்ள கேஏஎல் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தொழில்துறை அமைச்சர் இ.பி.ஜெயராஜன் தலைமை வகித்தார். கூடுதல் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் களை மாற்றுத்திறனாளிகள் நல வாரிய தலைவர் பரசு வய்க்கல் மோகனன், அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரனிடமிருந்து பெற்றுக்கொண்டார். சட்டமன்ற உறுப்பினர் களான கே.ஆன்சலன், சி.கே.ஹரீந்திரன், கேஏஎல் தலைவர் கரமன ஹரி, இயக்குநர் சி.சத்திய சந்திரன், நிர்வாக இயக்குநர் ஏ.ஷாஜகான் ஆகியோர் விழாவில் பேசினர்.