திருவனந்தபுரம், ஜுலை 7- மாவட்ட எல்லையை கடக்கும் தினசரி வழக்கம் இனி ஏற்றுக்கொள்ளப் படாது என்றும் கட்டுப்பாடுகள் கடுமை யாக்கப்படுவதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: மஞ்சேஸ்வ ரத்திலிருந்து ஏராளமானோர் தினமும் மங்களூருக்கு சென்று வருகிறார்கள். இது நோய் பரவலுக்கு வழிவகுக்கும் என்பதால் தினசரி உள்ள போக்கு வரத்து கூடாது. வேலை நிமித்தம் சென்றாக வேண்டும் என்றால் அவர்கள் மாதம் ஒரு முறை வரும் வகையில் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். ஐடி துறையில் குறைந்தபட்ச செயல் பாட்டுக்கான சூழ்நிலை உருவாக்கப் படும். மும்மடங்கு ஊரடங்கு மூலம் டெக்னோ பார்க்கில் உள்ள நிறுவ னங்கள் சிரமத்தில் உள்ளன. அங்கு குறைந்தபட்ச வேலைக்கான வசதி களை அனுமதிக்க வேண்டும்.
அமைச்சர்களில் அலுவலகங்கள் குறை வான ஊழியர்களுடன் செயல்பட வேண்டும். கேரளத்தில் துணை ராணு வத்தைச் சேர்ந்த 104 பேருக்கு இதுவரை கோவிட் தொற்று ஏற்பட்டது. வசிப்பி டங்கள் மூலம் அவர்களுக்கு நோய் பரவாமல் இருக்க மாவட்ட நிர்வா கங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மரணமடைந்தவர்களின் கோவிட் பரிசோதனை உடனடியாக நடத்தி முடிவை வெளியிடுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் கோவிட் தடுப்புக்கான வலுவான நடவடிக்கை கள் துவக்கம் முதல் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. தலைநகரம் என்ப தால் பல இடங்களில் உள்ளவர்கள் வரும் ஒரு பரபரப்பான நகரம் திரு வனந்தபுரம். அதோடு தமிழ்நாட்டுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. பல்வேறு தேவைகளுக்காக தமிழ் நாட்டில் இருந்து ஏராளமானோர் வரு கிறார்கள். முதல் இரண்டு கட்டத்தில் திருவனந்தபுரத்தில் கோவிட் பரவல் குறைவாக காணப்பட்டது. முதலில் 17 பேருக்கு கோவிட் உறுதி செய்யப் பட்டது. அதில் 12 பேர் வெளியில் இருந்து வந்தவர்கள். ஆனால், மே 4 முதல் இதுவரை 274 பேருக்கு திருவனந்த புரத்தில் நோய் தொற்று ஏற்பட்டது. அதில் 214 பேர் வெளியில் இருந்து வந்த வர்கள். இப்போது கட்டுப்படுத்த வில்லை என்றால் நிலைமை கைவிட்டுப் போய்விடும் என்பதால்தான் திருவனந்த புரத்தில் மும்மடங்கு ஊரடங்கு அறி விக்கப்பட்டது என்றார்.
மீன் வியாபாரியிடமிருந்து 9 பேருக்கு
பூந்துறையில் மீன் வியாபாரியிட மிருந்து 9 பேருக்கு நோய் பரவி யுள்ளது. அவர்களிடமிருந்து வேறு சில ருக்கும் நோய் பரவியுள்ளது. தொடர்ச்சி யாக மீன் வாங்கியுள்ள அந்த நபர் அதை விற்பதற்காக பல பகுதிகளுக்கும் சென்றுள்ளார். எனவே பரவலான ஆன்றிஜன் சோதனை நடத்தி நோயாளி களை கண்டறியும் முயற்சி நடக்கிறது. ஆற்றுக்கால், மணக்காவு உள்ளிட்ட பகுதிகளில் சிலருக்கு கோவிட் அறிகுறிகள் காணப்பட்டதால் கோவிட் மையங்களில் அனுமதிக்கப்பட்டனர். மருந்து பிரதிநிதிகள், மீன் தொழிலா ளிகள், உணவு வநியோகிப்போர் போன்றோரை தனியாக பரிசோதனை நடத்துவது தொடர்கிறது என முதல்வர் தெரிவித்தார்.